முட்டை ஓட்டை வீசுபவரா நீங்கள்! 90% கல்சியத்தை இழந்துவிட்டீர்கள்..!!

Read Time:3 Minute, 11 Second

thehomeissue_eggsமுட்டையில் எவ்வளவு ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளதோ அவ்வளவு சத்துக்களும் முட்டையின் ஓட்டில் உள்ளது. முட்டையின் ஓட்டில் 90% கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், மாங்கனீசு, ப்ளூரின், பாஸ்பரஸ் மற்றும் குரோமியம் போன்ற சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

எனவே இந்த முட்டை ஓட்டினை பொடி செய்து, ஒரு நாளைக்கு 3 கிராம் வரை சாப்பிடுவது மிகவும் நல்லது. இனிமேல் நாம் அனைவரும் முட்டையை சமைக்கும் போது முட்டையின் ஓட்டை தூக்கி வீசாமல், பொடி செய்து சாப்பிட்டு, நமது உடம்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

முட்டை ஓட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

* 5 முட்டையின் ஓட்டை உலர வைத்து, பின் அதனை பொடி செய்து, அதை 3 லிட்டர் தண்ணீரில் கலந்து, 7 நாட்கள் கழித்து, ஒரு நாளைக்கு 3 டம்ளர் அளவு குடிக்க வேண்டும். மேலும் அதில் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம். இதனால் நமது உடம்பில் ஓடும் ரத்தத்தை சுத்தம் அடையச் செய்கிறது.

* 8 முட்டையின் ஓட்டை உலர வைத்து, பின் அதை பொடி செய்து, அதில் 2 எலுமிச்சை பழத்தின் சாற்றை சேர்த்து, வடிகட்டி, அதனுடன் தேன் சேர்த்து கலந்து, 7 நாட்கள் கழித்து, 1 டீஸ்பூன் என்னும் விகிதத்தில் தினமும் 4 முறை உணவு சாப்பிட்ட பின்பு சாப்பிட வேண்டும். இதனால் தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக செயல்படும்.

* முட்டை ஓட்டை பொடி செய்து, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து, பின் அதை சூடான பாலில் சேர்த்து, தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் மற்றும் இரவு உற்ங்கும் முன்பும் குடித்து வர வேண்டும். இதனால் அல்சர் பிரச்சனை வராமல் தடுக்கிறது.

* முட்டை ஓட்டின் பொடியை தினமும் நம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலம், கால்சியம் குறைபாடு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதைத் தடுத்து, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எலும்புகளை வலிமை அடையச் செய்கிறது.

* உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் முட்டையின் ஓட்டை பொடி செய்து தண்ணீருடன் சேர்த்து கலந்து, குடித்து வர வேண்டும். இதனால் கொலஸ்ட்ராலின் அளவு விரைவில் குறைந்து விடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சசிகலா எங்கே போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன்… தோற்கடிப்பேன் – ஜெ., தீபா..!!
Next post  ‘கிளிநொச்சியை’ சம்பந்தர் மீட்பாரா? (கட்டுரை)