மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு..!!

Read Time:2 Minute, 5 Second

201701041456287904_brand-new-organ-identified-in-human-body_secvpfஉடற்கூறியல் வரலாற்றில் சுமார் 100 ஆண்டுகளாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

மனித உடலின் குடல் பகுதியை வயிற்றுடன் இணைக்கும் ‘நடுமடிப்பு’, (Mesentery) இத்தனை காலமாக பல்வேறு திசுக்கள் ஒன்றிணைந்த ஒரு அமைப்பாகவே கருதப்பட்டு வந்தது.

இந்நிலையில், அயர்லாந்தை சேர்ந்த லிமெரிக் பல்கலைக்கழகத்தின் ஜெ.கேல்வின் காஃப்பே என்ற ஆராய்ச்சியாளர் வயிற்றின் நடுமடிப்பு பகுதியானது, தொடர்ச்சியான உள்கட்டமைப்பினை கொண்டதொரு தனிஉறுப்பு என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

மற்ற உறுப்புகளை போல் இதனை அணுகும் போது, இந்த உறுப்பு தொடர்பான நோய்களை வகைப்படுத்தி, அவற்றை குணப்படுத்துவது எப்படி என்ற ரீதியில் அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.

உடலில் புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுமடிப்பு என்ற இந்த உறுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவிற்கேற்ப, இந்த புதிய உறுப்பின் இயக்கம் குறித்து இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள முடியும்.

இதன் இயக்கம் குறித்த தகவல்கள் அறிந்து கொள்ளும்பட்சத்தில் வயிறு மற்றும் குடல் பகுதி சார்ந்து பல்வேறு நோய்களை எளிமையாக குணப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஜித் மகள் அனோஷ்காவின் பிறந்தநாளை கொண்டாடிய விஜய்! அமேசிங் வீடியோ..!!
Next post போதையில் பெற்றோரை கட்டிப் போட்டு சித்ரவதை செய்த வாலிபர்..!!