இரவில் தனியாக வெளியே செல்லும் பெண்களின் கவனத்திற்கு..!!

Read Time:2 Minute, 24 Second

%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2இரவானாலும், பகலானாலும் இரயிலில் பயணம் செய்யும் போது ஆட்களே இல்லாத அல்லது ஒரு சிலர் மட்டுமே இருக்கும் கம்பார்ட்மெண்டில் ஏறாதீர்கள். ஆட்கள் இருக்கும் பக்கமே ஏறுங்கள்.

ஆட்டோவில் தனியே பயணம் செய்ய வேண்டியத் தருணம் வந்தால், ஆட்டோவில் ஏறும் போதே தொலைபேசியில் உங்கள் வீட்டாருக்கோ இல்லை நண்பருக்கோ அழைத்துப் பேசத் தொடங்குங்கள். எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை சொல்லி விட்டு தொடர்ந்து இறங்கும் இடம் வரும் வரை அழைப்பைத் துண்டிக்காமல் பேசிக் கொண்டே செல்லுங்கள். (அதற்காக ஆட்டோக்காரர் சரியான ரூட்டில் தான் செல்கிறாரா என்பதை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்)

பேருந்து நிலையம், இரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் என எங்கு நின்றாலும் ஏதேனும் ஒரு குடும்பம் நிற்கும் பக்கமோ இல்லை பெண்கள் கூட்டமாக நிற்கும் பக்கமோ நில்லுங்கள். தனியே நிற்காதீர்கள்.
இரவில் வீதியில் தனியாக நடக்க வேண்டி வந்தால், அச்சத்தோடு தலையை குனிந்தபடி நடக்காதீர்கள். நிமிர்ந்து எல்லா பக்கமும் நோட்டம் விட்ட படி நடங்கள்.

கேலி கிண்டல் செய்யும் ஆண்களை எப்போதும் கண்டு கொள்ளாதீர்கள். முறைக்காதீர்கள். உங்கள் காதில் எதுவுமே விழாதது போல நினைத்துக் கொண்டு நடையைக்கட்டுங்கள்.

பெண்கள் தன் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் தான் சொந்த ஊரை விட்டு விடுதியில் தன் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு உங்களை விட பெரிய பாதுகாப்பு யாருமில்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விதையில் அடிப்பட்டால், வயிற்றில் மிகுந்த வலி ஏற்படுவது ஏன்?..!!
Next post உங்களுக்கு இளமையாகத் தோன்ற ஆசையா..!!