ஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா?..!!

Read Time:18 Minute, 49 Second

kamamaaவிஞ்ஞானத்தில், மனிதப் பரிணாமம் குறித்து ஓர் வரைபடம் உண்டு. அடர்ந்த விருட்சக மரம், அதில் பல கிளைகள் இருக்கும்.

மரத்தை உயிராகவும், அதில் இருந்து தோன்றிய பல கிளைகளில் ஒரு கிளை பூச்சிகள், ஒரு கிளை பறவைகள், மற்றொரு கிளை பாலூட்டும் பிராணிகள், ஒரு கிளை மனித இனம்.

இப்படி உயிர்கள் அனைத்தும் ஒன்றே என்பதை உணர்த்தும் வரைபடம்.

அமீபா பூச்சியில், பாக்டீரியாவில் துடிக்கும் உயிரே மனிதனுக்குள்ளும் துடித்துக்கொண்டு இருக்கிறது என்று உயிர்தோற்றத்தைப் பற்றி விஞ்ஞானம் குறிப்பிடுகிறது.

மனித இனம் எப்போதுமே சோதனை செய்தல், தவறை உணர்/தல், மீண்டும் சோதித்தல என்ற முறையைப் பின்பற்றியே (Trial and Error) முன்னேறி வந்துள்ளது.

ஆதிகால மனிதர்கள், அதாவது ‘கற்பு’ என்ற சொல்லுக்கு அர்த்தம் உருவகப்படுத்/தாத காலகட்டத்தில், உடன்பிறந்த சகோதரிகளையும், பெற்ற தாயையும், மகனையும், மகளையும் புணர்ந்தார்கள்.

மதம் தோன்றிய காலகட்டத்தில், பாபிலோன் நகரத்தில் பெண்கள் பருவம் அடைந்தால் ஏதேனும் ஓர் கிறிஸ்துவ ஆலயத்தில் யாராவது ஓர் ஆணுடன் சேர்க்கையில் ஈடுபட்டு தன்னுடைய கன்னித்தன்மையை அழித்துக்கொள்ளும் சடங்கைப் புனிதமான மதச் சடங்காகக் கருதி இருக்கின்றனர்.

இன்னொரு நாட்டைச் சேர்ந்த கன்னிப் பெண்கள், தங்களுக்கு இஷ்டமானவர்களுடன் இணைந்து திருமணத்துக்குக் கொடுக்க வேண்டிய சீதனத்தைச் சம்பாதித்துள்ளனர்.

யார் அதிகமான சீதனங்கள் வைத்திருக்கிறார்களோ அந்தப் பெண்களையே மணக்க ஆண்கள் விரும்பியிருக்கின்றனர்.

திருமணத்துக்குப் பிறகு மற்ற ஆண்களுடன் சேரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓர் இளவரசி விபசாரத்தில் சேர்த்த பணத்தில் தனக்கென ஓர் பிரமிட் கட்டியதாக வரலாறு உண்டு.

கி.மு. 66-ல், அரேபிய நாட்டில் அண்ணன் தங்கைகளிடமும், தாய் மகன்களிடமும், புணர்ச்சியில் ஈடுபட்டதாக வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.

வம்சவிருத்திக்காகவும் முறைகேடான முறையில் புணர்ச்சிகள் இருந்திருக்கின்றன. பிறகு, ஓரளவு நாகரிகம் அடைந்த மனிதன், தாயையும் சகோதரியையும்

மகளையும் புணர்வது அநாகரிகமானது எனத் தவிர்த்தான். குழுக்களாக, சிறு சிறு இனங்களாகத் திரிந்த மனிதக் கூட்டங்களை, அரசாட்சிகள் ஆள ஆரம்பித்த கட்டங்களில்கூட, மனிதனின் காமப்பசி வேறு திசைகளில் திருப்பிவிடப்பட்டது.

giraud-marchand-esclavesஆக்கிரமிப்பு வேகமும் (Aggressive Instinct) காம வேகமும் (Sex Instinct), வன்முறைகளாகவும் மாறி இருக்கின்றன.

இலியட் என்ற கிரேக்க காவியத்தில், பாரிஸ் என்ற ட்ராய் (Troy) நகரத்து இளவரசன், அக்கேய கிரேக்கர் தலைவனாகிய மெனிலாஸின் என்பவனின் மனைவி ஹெலன் மீது ஏற்பட்ட காமத்தால் கடத்திச்செல்ல, ஆத்திரம் அடைந்த கிரேக்கர்கள் ஆயிரம் போர்க்கப்பல்களில் சென்று ட்ராய் நகரத்தை முற்றுகையிட்டு பத்து ஆண்டுகள் போர் செய்து, லட்சக்கணக்கில் போர் வீரர்கள் இறந்து, இறுதியில் ஹெலன் மீட்கப்பட்டாள்.

பிறகு, ட்ராய் நகரத்தையே தீவைத்து அழித்தனர் கிரேக்கர்கள்.

நம் நாட்டில், சீதையை ஆக்கிரமித்ததற்காக எழுந்த போர், ராமாயணம். திரௌபதியின் சேலையைப் பிடித்து இழுத்து அசிங்கப்படுத்தியதில் தொடங்கியது மகாபாரதப் போர்.

வக்கிர குணம் எல்லை மீறும்போது அங்கே அறநெறி ஆவேசப்படுகிறது.

இவை, மனித வாழ்க்கை முழுவதும் எழுதப்படாத சட்டமாக இயங்குகின்றன அல்லது சமூகத்தை இயக்கிக்கொண்டிருக்கின்றன என்பதற்கான உதாரணங்கள்.

மனிதன் ஒரு காலத்தில் கடைப்பிடித்த கோட்பாடுகள், வேறொரு காலத்தில் அநாகரிகமாகவும், விமரிசனத்துக்கும் உள்ளானது எனலாம்.

homo-unisexமனிதனின் பால் உணர்வுகளைக் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று முதன்முதலாக வலியுறுத்தியவர்கள் யூத மதத்தைச் சார்ந்தவர்கள்தான்.

தாய், மகன், மகள், தந்தை குறித்த உறவுகளுக்கு என்று பண்பை உருவாக்கியது யூத மதம்.

தாய், கடவுள் ஸ்தானத்தில் வைக்கப்பட்டாள். இவையெல்லாம் ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு நடந்த சம்பவங்கள். மோசஸ் உருவாக்கிய பத்து கட்டளைகள், யூத மக்களிடம் ஒருவித கட்டுப்பாட்டை உருவாக்கின.

பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் மனைவிகளைவிட்டு வெளியூருக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்படும்போது, இதர ஆண்களோடு கலவிச் சேர்க்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக இரும்பால் ஆன உள்ளாடையைப் (ஜட்டி) போட்டு பூட்டிவைக்கும் வழக்கமும் ஏற்பட்டன.

மன்னர்களும், சீமான்களும் இம்முறையைக் கையாண்டனர்.

தங்கள் வாரிசில் கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் மிகத் தீவிரமான முறைகளைக் கடைப்பிடித்தனர்.

அந்தப்புரத்தில் இருக்கும் காவலாளிகள், அங்கிருக்கும் பெண்களுடன் புணர்ச்சியில் ஈடுபடக் கூடாது என்பதற்காக, அவர்களுடைய ஆண் குறிகள் வெட்டப்பட்டன.

சில ஆப்பிரிக்க நாடுகளில், பெண்களின் பிறப்புறுப்புகளைத் தைத்துவிடுவது, கிளைட்டோரிஸை வெட்டிவிடுவது போன்ற கொடூரமான பழக்கங்கள் இன்றும் இருக்கின்றன.

அதேபோல், போர்க் களத்தில் இருந்த வீரர்கள் நெடுங்காலமாகப் புணர்ச்சியில் ஈடுபடாததால், தங்களுடன் இருந்த வீரர்களுடன் புணர்ச்சியில் ஈடுபட்டனர்.

ஓரினச் சேர்க்கை அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாகும்.

இன்றும்கூட சிறைக் கைதிகளும், ராணுவத்தில் இருக்கும் வீரர்களும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால், இந்த வழக்கத்துக்கு தொடக்கத்தில் இருந்தே கடுமையான எதிர்ப்பு இருந்து வருகிறது.

ஓரினச் சேர்க்கை தோன்றுவதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுவது உண்டு.

ஆடை இல்லாமல் வாழ்ந்த மனிதன், தன் உடலை அழகுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துக்கு வந்தபோது, தன்னை அழகுப்படுத்தி ரசிக்க ஆரம்பித்தான்.

அந்த எண்ணம் நாளடைவில், தன்னைப்போல் அழகுணர்ச்சியுடன் அழகுப்படுத்திக்கொண்டுள்ள மனிதனிடம் ஏற்பட்ட அதீத ஈர்ப்பும், அதை ரசித்துப்பார்த்ததிலும், தடவிப்பார்த்ததிலும் கிடைத்த சிலிர்ப்புகள் காரணமாக புணர்ச்சிகளில் ஈடுபட ஆரம்பித்திருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

capa4untitled-2ஆணை ஆண் புணர்வதும், பெண்ணை பெண் புணர்வதும் அல்லது சில ஆண்களுடனும் பெண்களுடனும் இணைந்து புணரும் இருபால் சேர்க்கையும் ஏற்பட்டன.

அலெக்ஸ்ரான்ஸ் லெக்ரான், உலகம் முழுவதும் தன் செல்வாக்கால் கிறிஸ்துவ மதம் பரவக் காரணமானவன்.

உலகமே தன் காலடியில் இருப்பதாக ஆங்காரத்துடன் திரிந்தவன்.

அளவுக்கு அதிகமான பெண்களை அனுபவித்து அனுபவித்து சலித்துப்போய், முதன்முதலில் ஆணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டான்.

வரலாற்று ஆதாரப்படி, உலகில் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்ட முதல் ஆள் இவன்தான்.

இவனுடைய காலத்தில்தான், எந்த ஒரு பெண்ணாவது அளவுக்கு மீறி காம சேர்க்கையில் அதீத ஆர்வம் காட்டினால், பேய் பிசாசு புகுந்திருப்பதாக உயிரோடு நெருப்பு வைத்து எரிக்கப்பட்ட கொடூரமும் நிகழ்ந்தது.

அதனால், பெண்கள் தங்கள் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டார்கள் அல்லது வெளிப்படுத்தாமல் இருந்தார்கள்.

அநேகப் போர்கள், முறையற்ற காமத்தாலும், வன்மையாலும், ஆக்கிரமிப்பாலும் நடைபெறுவதும், மறுபக்கம் பொதுமக்களிடமும் தீராக் காமமும், அதனால் நடக்கும் அடிதடிகளையும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்தவர் மனவியல் ஞானி சிக்மண்ட் ஃப்ராய்டு. ‘காம வேகமும், ஆக்கிரமிப்பு வேகமும் மனித மனத்தை ஆட்டிப்படைக்கும் உந்து சக்திகளுக்குள் முதன்மையானது’ என்ற அவரது கோட்பாட்டை ஏற்க மருத்துவ உலகம் முதலில் மறுத்தது.

மேலும், அவரைக் கிண்டலும், கேலியும் செய்து பழித்தது. ஆனால், நாளடைவில் அந்தக் கோட்பாட்டின் பலத்தை மருத்துவ உலகம் ஏற்றுக்கொண்டது. இன்று, Psychiatry என்ற மனநோய் சிகிச்சை மருத்துவம், நல்ல வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது.

சட்டங்கள் உருவான காலகட்டத்தில், அத்துமீறல்களுக்குக் கடும் தண்டனைகள் கொடுக்கப்பட்டன.

ஒவ்வொரு சமூகத்திலும் (நாடுகளில்) கடுமையான சட்டவிதிகளின்படி மனிதன் தண்டிக்கப்பட்டான். அதனால், மனிதனின் செயல்பாடுகள் கட்டுக்குள் இருந்தன.

புணர்ச்சிகளின் கட்டுப்பாடுகள் மனிதனைப் பல்வேறு தவறான அணுகுமுறைக்குக் கொண்டு சென்றது. புணர்ச்சியாளர்களை மருத்துவ உலகம் மூன்று வகைப்படுத்துகிறது.

bisexual-club
ஆணும் பெண்ணும் புணர்ச்சியில் ஈடுபடு/வது, பெண்ணும் பெண்ணும் (Lesbian) அல்லது ஆணும் ஆணும் புணர்ச்சியில் ஈடுபடுவது (Homo Sex) எனவும், ஆண்கள் பெண்கள் என இருபால் உணர்ச்சியாளர்களும் (Bisexuals) இணைந்து குரூப் செக்ஸில் ஈடுபடுவது (Group Sex) ஆகும்.

ஹோமே என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் ஒரே மாதிரியானவை என்று அர்த்தம்.

மருத்துவ உலகம் குறிப்பிட்ட மூன்று புணர்ச்சி வகைகளையும் மீறி பலவகைகளில் அதிகரித்து வரும் புணர்ச்சிகளுக்கு என்ன குறியீடு வைப்பது என்று தடுமாறிவிட்டது.

கிரேக்க நாட்டில் இருந்த லெஸ்போஸ் (Lesbos) என்ற தீவில் கி.மு. 7-ம் நூற்றாண்டில் வசித்த பெண்கள், மற்ற பெண்களுடன் சேர்க்கையில் ஈடுபட்டனர்.

அதனால்தான், பெண்களின் ஓரினச் சேர்க்கைக்கு ‘லெஸ்பியன்’ என்று பெயரிடப்பட்டது.

கிரேக்கம், ரோமாபுரி போன்ற பேரரசுகளில் ஓரினச் சேர்க்கை தவறாகப் பார்க்கப்படவில்லை.

கி.பி. 4-ம் நூற்றாண்டுக்குப் பிறகு, ஓரினச் சேர்க்கையாளர்கள் மீது இருந்த அங்கீகாரம் இந்த நாடுகளில் மாறத் தொடங்கியது.

இயற்கைக்கு மாறான பாலியல்கள், பாவத்துக்குச் சமம் என்று மதங்கள் சொல்லின. 19-ம் நூற்றாண்டில், ஓரினச் சேர்க்கை என்பது மனநலம் பாதிக்கும் உறவானது மட்டுமல்லாமல் உடல் நலத்துக்குக் கேடானது என்றும் பல தொற்று நோய்களை ஏற்படுத்தக்கூடியதும், மனவக்கிரங்களை அதிகரிக்கச் செய்து மனிதர்களைக் கட்டுப்பாடு அற்றவர்களாக மாற்றி, சமூகத்தில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்று மருத்துவ உலகம் எச்சரித்தது.

இந்தக் காலகட்டத்தில், ஐரோப்பாவைச் சேர்ந்த மாவீரன் நெப்போலியன், 1804-ம் ஆண்டில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தவறல்ல என்று சட்டம் கொண்டுவந்தார்.

நெப்போலியன், ஓரினச் சேர்க்கைப் பிரியர் என்பதால் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

பிறகு, ஐரோப்பாவில் மக்களாட்சி வந்தபோது சட்டங்கள் மாற்றப்பட்டன.

அதில் ஓரினச் சேர்க்கை குற்றமாக அறிவிக்கப்பட்டது. பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளில் ஓரினச் சேர்க்கையை மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

நெதர்லாந்து, பெல்ஜியம் நாடுகளுக்கு அடுத்ததாக ஸ்பெயின் நாட்டில் ஓரினச் சேர்க்கை அங்கீகரிக்கப்பட்டது.

ஸ்பெயின் பிரதமரான ழஜோஸ் லூயிஸ் சமுதாயச் சீர்திருத்த நடவடிக்கை என ஓரினச் சேர்க்கை சட்டத்தைத் தடைசெய்ய முயன்றபோது, ‘சமுதாயச் சீர்திருத்தம் என்ற பெயரில் செக்ஸ் சுதந்தரத்தை முடக்க நினைக்கும் கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டோம்’ என்று பெரும்பான்மையான ஓரினச் சேர்க்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அத்திட்டம் கைவிடப்பட்டது.

ஆணுடன் ஆண், பெண்ணுடன் பெண் செய்துகொள்ளும் ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள், அவர்கள் தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைகளின் மனநிலைகள் குறித்து அதிகம் விவாதத்துக்கு உள்ளானது.

2003-ல், கனடா நாட்டுப் பிரதமராக இருந்த ழஜான், ‘ஐரோப்பாவில் சில நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதைப்போல் கனடாவிலும் விரைவில் ஓரினச் சேர்க்கைக்கு சட்டம் கொண்டு வரப்படும்’ என்று அறிவித்தபோது கட்சிக்குள் இருந்தும், பொது மக்களிடம் இருந்தும் அதற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

‘இயற்கைக்கு மாறாக, ஆண் அல்லது பெண் யாருடனோ, விலங்குடனோ தன்னிச்சையாக காம விகார உடலுறவு கொள்பவருக்கு, ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள்வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனை ஆகியவற்றில் இரண்டில் ஒன்றைத் தண்டனையாக விதிக்க வேண்டும் மற்றும் அவருக்கு அதிக அபராதமும் விதிக்கலாம்’ என்கிறது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு-377.

எழுத்தாளர் விக்ரம் சேத், நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென், அருந்ததி ராய் உள்பட மற்றும் சிலர், இந்தியச் சட்டம் 377 குறித்து விமரிசனங்களை வைத்தனர்.

இந்தச் சட்டத்தால் அரவாணிகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

2006-ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் மட்டும் 24 லட்சம் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது.

இந்தியாவில், முதன்முதலாக ஓரினச் சேர்க்கைக்கு எதிரான இந்தியச் சட்டப் பிரிவு-377 ரத்து செய்வது குறித்து பேச்சு எழுந்தது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை, மத்திய சுகாதாரத் துறை, குடும்ப நல துறை மூன்றும் கலந்தாலோசித்தன.

முடிவில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு-377 தடை செய்யப்பட்டது. ஆனால், ஓரினச் சேர்க்கைக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

இருப்பினும், சென்ற ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் இரு பெண்கள் திருமணம் செய்து கெண்டனர். இவர்களே இந்தியாவில் முதல் ஓரினச் சேர்க்கை தம்பதிகள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீச்சலுடையில் திரிஷா- அருகில் இருப்பவர் யார்?..!!
Next post கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வு தரும் துளசி..!!