தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது- காதலிக்க மறுத்த பெண்ணிற்கு நடந்த கொடூரம்..!!..!!

Read Time:4 Minute, 16 Second

murder-knifeகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி பிள்ளை. இவரது மகள் அனுகென்சி (வயது 20). இவர் நெல்லையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவரை நித்திரவிளை பூந்தோப்பு காலனியைச் சேர்ந்த பிஜூ காஸ்ரோ (27) என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்தார். அனுகென்சி செல்லும் இடங்களுக்கெல்லாம் பிஜூ காஸ்ரோ பின் தொடர்ந்து சென்று தனது காதலை அவர் வெளிப்படுத்தினார். ஆனால் அனுகென்சி அவரை காதலிக்க மறுத்தார்.

கடந்த 6 மாதத்துக்கு முன்பு பிஜூ காஸ்ரோவின் தொல்லை அதிகரிக்கவே அவர் மீது அனுகென்சி நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் பிஜூ காஸ்ரோவை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அதன்பிறகு சிறிது காலம் ஒதுங்கி இருந்த பிஜூ காஸ்ரோ, மீண்டும் அனுகென்சியை பின் தொடரத் தொடங்கினார். நீ என்னை கண்டிப்பாக காதலிக்க வேண்டும், உன்னை தான் திருமணம் செய்வேன் என்று மிரட்டினார். ஆனால் அவரது மிரட்டலுக்கு அடிபணியாமல் அனுகென்சி அவரை விட்டு விலகியே சென்றார்.

இந்தநிலையில் அனு கென்சிக்கும், மற்றொரு வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி வருகிற 5-ந் தேதி அனுகென்சிக்கு திருமண நடக்க உள்ளது.

இதையறிந்த பிஜூ காஸ்ரோ ஆத்திரம் அடைந்தார். தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது என அவர் முடிவு செய்தார். நேற்று நள்ளிரவு அனுகென்சி அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு புத்தாண்டு பிரார்த்தனைக்கு செல்வதை அவர் அறிந்தார். இதையடுத்து ஆலயத்தின் வெளியே கத்தியுடன் அவர் காத்து நின்றார்.

புத்தாண்டு பிரார்த்தனை முடிந்து பக்தர்கள் கூட்டத்தோடு கூட்டமாக அனுகென்சி ஆலயத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது பாய்ந்து சென்ற பிஜூ காஸ்ரோ, அனுகென்சியை கத்தியால் சரமாரியாக குத்தினார். அனுகென்சியின் வயிற்றில் ஆழமாக கத்திக்குத்து விழுந்தது. வலி தாங்க முடியாமல் அனுகென்சி அலறி துடித்தார். அவருடன் வந்த பெண்கள் சத்தம் போட்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

சுதாரித்துக் கொண்ட சிலர் பிஜூ காஸ்ரோவை துரத்தி பிடித்தனர். அந்த இடத்திலேயே அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர் நித்திரவிளை போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். கைதான பிஜூ காஸ்ரோ மீன் பிடித் தொழில் செய்து வருகிறார்.

கத்திக்குத்து ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்த அனுகென்சியை உறவினர்கள் மீட்டு நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொம்மை பூனையை பார்த்து கிறுக்கு பிடித்து சுற்றிய நிஜ பூனை.!! [வீடியோ]
Next post கவனக்குறைவால் 7 மாத குழந்தை மீது காரை ஏற்றிய தாய்..!!