வாசகர்களுக்கு இனிய 2017 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!

Read Time:2 Minute, 49 Second

625-0-560-320-160-600-053-800-668-160-90கிரகரியன் காலண்டரை’ பின்பற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளில் இன்று புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் புழக்கத்தில் இருந்த ரோமானிய கலண்டரில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என 10 மாதங்கள் ஒரு ஆண்டாக கணக்கிடப்பட்டது.

ஆண்டின் தொடக்க நாளாக மார்ச் 1ம், இறுதி நாளாக ஏப்., 31ம் இருந்தது.

கி.மு., 46ல் ரோமானிய தலைவர் ஜூலியஸ் சீசரின் ‘ஜூலியன் கலண்டர்’ அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் 12 மாதங்கள் சேர்க்கப்பட்டன. ஜன., 1 புத்தாண்டாக கடைப்பிடிக்கப்பட்டது.

இருப்பினும் ஐரோப்பாவின் சில நாடுகளில் டிச., 25, மார்ச் 1, மார்ச் 25 என வெவ்வேறு தேதிகளில் புத்தாண்டு கடைப்பிடிக்கப்பட்டது.

பின் ‘ஜூலியன் கலண்டரில்’ உள்ள ‘லீப் இயர்’ கணக்கீடுகளை சரி செய்து செம்மைப் படுத்தினார் ரோமை சேர்ந்த போப் கிரகரி.

1582ல் ‘கிரகரியன் கலண்டரை’ அறிமுகப்படுத்தினார். இதில், ஜூலை, ஆகஸ்ட் சேர்க்கப்பட்டு 12 மாதங்கள் ஒரு ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டது.

ஜன., 1 புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.

இதை பெரும்பாலான கத்தோலிக்க நாடுகள் ஏற்றுக்கொண்டன.

1752 வரை பிரிட்டன் இக்கலண்டரை ஏற்றுக் கொள்ளவில்லை.

சில அமெரிக்க குடியேற்ற நாடுகளில் மார்ச் 1 புத்தாண்டாக கடைப்பிடிக்கப் படுகிறது.

சீனா, பாகிஸ்தான், எத்தியோப்பியா உள்ளிட்ட சில நாடுகளில் வேறு தேதிகளில் புத்தாண்டு கடைபிடிக்கப்படுகிறது.

இருப்பினும் உலகில் ஒரு சில நாடுகளை தவிர அனைத்து நாடுகளும் ‘கிரகரியன் கலண்டரை’ அடிப்படையாகக் கொண்டு ஜன., 1ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடுகின்றன..

இன்று மலர்ந்துள்ள இந்த இனிய 2017 புத்தாண்டில் தாங்கள் தமது சொந்தங்களுடனும், சுற்றத்தார்களுடனும், சிறப்புடனும், மனநிறைவுடனும், சந்தோசத்துடனும் வாழ வேண்டுமென்று வாழ்த்துகின்றோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரட்னசிறியின் இல்லம் சம்பந்தனுக்கு…!!
Next post வவுனியாவில் மனைவியை காணவில்லை! கணவன் முறைப்பாடு..!!