வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த கற்றாழை ஜெல் மாஸ்க் போடுங்க…!!

Read Time:3 Minute, 12 Second

dark-skin-31-1472627983-29-1483006880வெள்ளையான தோலின் மீது பலருக்கும் ஆசை இருக்கும். வெள்ளையாக வேண்டுமென்று, நம்மில் பலரும் மற்றவர்களுக்குத் தெரியாமல் எத்தனையோ க்ரீம்கள் மற்றும் ஃபேஸ் பேக்குகளைப் போட்டிருப்போம்.

ஆனால் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு மாஸ்க் தயாரித்து போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சரும செல்களின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் கற்றாழை ஜெல் ஃபேஸ் மாஸ்க்கை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்றும், எப்படி பயன்படுத்த வேண்டுமென்றும் கொடுத்துள்ளது. அதைப் படித்து முயற்சித்து, நீங்கள் வெள்ளையாக ஜொலிக்க ஆரம்பியுங்கள்.

தேவையான பொருட்கள்:

கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை பவுடர் – 3 டேபிள் ஸ்பூன் தேன் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை #1 முதலில் ஒரு நான்ஸ்டிக் பேனில் கற்றாழை ஜெல்லை சேர்த்து சூடேற்ற வேண்டும். ஜெல் கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை பவுடர் சேர்த்து, கட்டி சேராதவாறு நன்கு கிளறி விட வேண்டும்

செய்முறை #2 இறுதியில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கிளறி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை #1 முதலில் ஒரு பிரஷ் கொண்டு கற்றாழைக் கலவையை முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் தடவ வேண்டும்.

பயன்படுத்தும் முறை #2 20 நிமிடம் கழித்து, நீர் பயன்படுத்தி சருமத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் நனைத்த பஞ்சு கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 9 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு படத்தில் குஷ்பு…!!
Next post கணவரை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் கைக்குழந்தையுடன் வந்து இளம்பெண் கண்ணீர் மனு…!!