ஆண்கள் கடுமையாக திட்டும் போது, பெண்களின் மனதில் எழும் எண்ணங்கள்…!!
பெண்களில் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம். ஆண்களில் நல்லவன், கெட்டவன் என இரண்டு வகை பிரித்து அதில் ஓரிரு உட்பிரிவுகளுக்குள் ஆண்களை அடக்கிவிடலாம்.
ஆனால், பெண்களை அப்படி எளிதாக புரிந்துக் கொள்ள முடியாது, சற்று கடினம் தான். என்னதான் பெண்கள் வீட்டி விட்டு வெளி உலகில் வந்து உயர்ந்துக் கொண்டிருக்கின்றனர் என்றாலும், வீட்டில் ஆண் ராஜ்ஜியம் என்பது இன்றளவும் இந்தியாவில் நிலவிக் கொண்டு தான் இருக்கின்றது.
சம்பாதித்து தரும் மனைவிகளையே அநாவசியமாக திட்டும் ஆண்களும் இருக்கின்றனர். எங்கோ இருக்கும் கோவத்தை கொண்டு வந்து ஆண்கள் வீட்டில் காண்பிக்கும் போது, அதை தினம் தினம் எதிர்கொள்ளும் பெண்கள் மனதில் எப்படிப்பட்ட எண்ணங்கள் எழும் என்பது குறித்து இனிப் பார்க்கலாம்….
புண்படும் பொதுவாகவே கோவப்படும் குணாதிசயம் கொண்டுள்ள பெண்களின் மனமும் கூட மென்மையானது தான். ஆண்கள் திட்டினாலே பெரும்பாலான பெண்களின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்துவிடும். அதே, கடுமையான வார்த்தைகளால் திட்டும் பொழுது, அந்த உறவு அல்லது வாழ்க்கையே வெறுக்கும் அளவிற்கு அவர்களது மனம் புண்பட்டுப் போகும்.
தனிமை தனிமை! பெண்கள் சிறுசிறு விஷயங்களில் தோல்வியை தழுவும் போதும் தாங்கள் இந்த உலகில் தனிமையில் தவிக்கப்பட்டுவிட்டோம் என எண்ணுகின்றனர். ஆண்களுக்கு அதிகமாக அக்கறை மற்றும் அரவணைப்பை அளிக்கும் பெண்கள், அதை ஆண்களிடமும் எதிர்பார்க்கின்றனர். அதுக் கிடைக்காமல் திட்டுவது மட்டும் தொடர்கையில் தாங்கள் இந்த உலகில் தனிமையாக இருக்கிறோம், நமக்கென யாருமில்லை என எண்ணி சிலர் முற்றிலும் துவண்டு போய்விடுகிறார்கள்.
போராட்டம்! அவர்களே சமைத்து வைத்த உணவாக இருப்பினும் சாப்பிட மாட்டார்கள். யாராவது வந்து சாப்பிட கூறி வற்புறுத்தி ஊட்டிவிட்டால் தான் சாப்பிடுவார்கள். இது குழந்தைத்தனம் மாறாத பெண்களிடம் காணப்படுபவை.
விவாகரத்து விஜயசாந்தி ஐ.பி.எஸ் போன்றவர்கள், திரும்பு சரமாரியாக திட்டவும் வாய்ப்பிருக்கின்றன. எதிர்த்து சண்டைக்கட்டும் குணம் கொண்டுள்ள பெண்கள், தொடர்ந்து தனது ஆண் திட்டிக் கொண்டே இருந்தால் விவாகரத்து வரை செல்வதற்கு கூட தயங்க மாட்டார்கள்.
சாந்த சொரூபி மிக சாந்த சொரூபியாய் இருக்கும் பெண்கள் தங்களுக்குள்ளே அழுதுக் கொண்டும், வாழ்க்கையை அலுத்துக் கொண்டும் சகித்துக் கொள்வார்கள். ஆனால், இது இவர்களது மனநிலையை, மனநலனை வெகுவாக பாதிக்கும். இதனால், இவர்களுக்கு உடல்நலம் பாதிக்கும் அபாயம் இருக்கின்றது.
புத்திசாலி புத்திசாலி பெண்மணிகள் மட்டுமே, கணவனை அமைதிப்படுத்தி, என்ன ஆச்சு, ஏன் கோவப்படுறீங்க, ஏதாவது பிரச்சனையா என விசாரித்து, அதற்கு தீர்வளிக்க பார்க்கின்றனர். இவர்களை போன்ற மனைவிகள் அமைந்தவர்கள் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Average Rating