பற்கள் மற்றும் ஈறுகளில் பிரச்சனைகள் உள்ளதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்…!!

Read Time:5 Minute, 13 Second

signs-that-your-teeth-health-is-not-good-21-1474454571-27-1482818248வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பலரும் அன்றாடம் விலை அதிகமான டூத் பேஸ்ட், மௌத் வா போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்துவோம். அதிலும் ப்ளூரைடுடன் சில மூலிகைகள் கலந்த டூத் பேஸ்ட்டைப் பயன்படுத்துவோம். ஏனெனில் ப்ளூரைடு பற்களின் எனாமலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். ஆனால் அந்த ப்ளூரைடு அளவுக்கு அதிகமானால், அது பற்களில் வெள்ளைப் புள்ளிகளை உண்டாக்கும்.

அக்காலத்தில் எல்லாம் டூத் பேஸ்ட் ஏதும் இல்லை. நம் முன்னோர்கள் மூலிகை பொடிகளையும், மூலிகைகளையும் கொண்டு தான் தங்கள் பற்களை சுத்தம் செய்து வந்தார்கள். இங்கு பற்களையும், ஈறுகளையும் சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் மூலிகைப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அருகம்புல் ஜூஸ் ஆய்வுகளில் அருகம்புல் உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்ற உதவுவதாக தெரிய வந்துள்ளது. மேலும் அருகம்புல் சாற்றினை வாயில் ஊற்றி கொப்பளித்தால், ஈறுகளில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறும். அதுமட்டுமின்றி, அருகம்புல் ஈறுகளில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுக்கும்.

கிராம்பு பல நூற்றாண்டுகளாக பல்வலிக்கு கிராம்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிராம்பில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள் உள்ளது. இது வாயில் உள்ள தொற்றுக்களை எதிர்த்துப் போராடும். அதற்கு கிராம்பை பல் வலி உள்ள இடத்தில் வைத்து கடித்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால், கிராம்பை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் சில துளிகள் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, பல் வலி உள்ள இடத்தில் தடவினால், பல் வலி உடனே நீங்கும்.

துளசி துளசியில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் உள்ளது. இது ஈறு நோய்கள், பற்காறைகள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவற்றைத் தடுக்கும். அதற்கு துளசி இலைகளை வாயில் போட்டு மெல்ல வேண்டும் அல்லது துளசி பொடியைக் கொண்டு பற்களைத் துலக்க வேண்டும்.

அதிமதுரம் அதிமதுரத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் உள்ளது. இந்த மூலிகை வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கத்தைத் தடுக்கும் மற்றும் ஈறு நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அதற்கு அதிமதுர வேரைக் கொண்டு பற்களைத் துலக்கவும் அல்லது அதிமதுர பொடியைக் கொண்டு பற்களைத் துலக்கவும்.

யூகலிப்டஸ் ஆயில் யூகலிப்டஸ் ஆயிலில் உள்ள உட்பொருட்கள் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். மேலும் இது ப்ளேக் உருவாக்கத்தைக் குறைத்து, ஈறுகளை வலிமைப்படுத்தி, இரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுத்து, வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதற்கு பற்களைத் துலக்கும் போது, டூத் பிரஷில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயிலை சேர்த்து, பற்களைத் துலக்க வேண்டும்.

ஓக் மரப்பட்டை ஓக் மரப்பட்டையில் டானின்கள் அதிகம் உள்ளது. இது ஈறுகளை இறுக்கமடையச் செய்து, ஈறு திசுக்களின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும். மேலும் இதில் மக்னீசியம், கால்சியம், ஜிங்க் போன்றவை அதிகம் உள்ளது. இதனால் பற்கள் மற்றும் தாடை வலிமையடையும். ஆகவே ஓக் மரப்பட்டை பொடியைக் கொண்டு பற்கள் மற்றும் ஈறுகளைத் தேய்க்க வேண்டும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருணாவை தனியாக அழைத்த பிரபாகரன்: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது? உலுக்கி போடும் உண்மைகள்! உறைய வைக்கும் தகவல்கள்!! -பகுதி-2)
Next post மஹிந்தவின் அரசியல் மையமாக மாறும் ஹம்பாந்தோட்டை…!! கட்டுரை