தண்டவாளத்தில் சிக்கிய நண்பன்! இரண்டு நாட்கள் போராடி உயிரை காப்பாற்றிய நாய்: நெகிழ வைக்கும் வீடியோ..!!

Read Time:1 Minute, 59 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-4உக்ரைனில் நாய் ஒன்று இரண்டு நாட்களாக ரயில் தண்டவாளத்தில் போராடி காயமடைந்த மற்றொரு நாயின் உயிரை பாதுகாத்து வந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.

Uzhgorod, Tseglovka கிராமத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த சம்பவத்தை Denis Malafeyev என்ற நபர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த வீடியோவில், ரயிலில் அடிப்பட்டு காயமடைந்த நாய் ஒன்று நகர முடியாமல் தண்டவாளத்தில் கிடக்கிறது. அதன் அருகே மற்றொரு நாய் பாதுகாத்து வருகிறது.

திடீரென அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வருகிறது, ரயிலின் சத்தத்தை அறிந்த நாய் அடிப்பட்டுகிடக்கும் நாயின் தலையை தரையோடு தரையாக அழுத்தி பிடிக்கிறது.

இரண்டு நாய்களும் தண்டவாளத்தின் குறுக்கே கிடக்க வேகமாக வரும் ரயில் நாய்களை பத்திரமாக கடந்து செல்கிறது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் கடும் பனி பொழிந்து வருகிறது.

இதுகுறித்து Denis Malafeyev தனது பதிவில் கூறியதாவது, கடந்த இரண்டு நாட்களாக அந்த நாய் அடிப்பட்டுகிடக்கும் நாயை ஒவ்வொரு முறை ரயில் கடக்கும் போது பாதுகாத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Denis Malafeyevவின் பதிவு வைரலாக அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்து இரண்டு நாய்களையும் மீட்டு சிகிச்சை அளித்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரித்தானியாவில் துயரம்! கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆறு மாத குழந்தை கொலை: காரணம்?
Next post கிடைத்த நேரத்தில் அருமையாக வாய்ப்பை பயன்படுத்திய மெக்கானிக் – திறமையை நிச்சயம் பாராட்டுவீங்க…!! வீடியோ