நாயின் முகத்தில் தீவைத்து எரித்த வாலிபர்கள்: கண்ணீர் விட்டு கதறிய பரிதாபம்…!!
இந்த உலகில் பகுத்தறிவு கொண்ட மனித உயிர்களிடம் இல்லாத ஒன்று நாய்களிடம் இருக்கிறது. அதுதான் நன்றி உணர்வு.
அந்த உணர்வு தங்களிடம் இல்லாத காரணத்தால் தான் மனிதர்கள், நாய் குரங்கு போன்ற வாய் பேச முடியாத உயிரினங்களை துன்புறுத்துகிறார்கள் என்னவோ?
சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் 4 பேர் சேர்ந்து, குரங்கினை மிக கொடூரமாக துன்புறுத்தி உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தற்போது, இதேபோன்று ஒரு சம்பவம் பிரித்தானியாவிலும் அரங்கேறியுள்ளது.
4 வாலிபர்கள் ஒன்று சேர்ந்து ஒரு நாயின் கால்களை உடைத்தும், அதன் முகத்தில் தீவைத்தும் அந்த நாய் உயிர்பிழைத்துள்ளது.
என்னை இவ்வாறு துன்புறுத்தியும் நான் உயிர்பிழைத்துவிட்டேனே…..என்னை போன்ற வாயில்லா செல்ல பிராணிகளை எதற்காக துன்புறுத்துகிறீர்கள், நான் உங்கள் செல்லபிராணி இல்லையா? என அந்த வாலிபர்களை பார்த்து மனம் விட்டு குமுறிய ஒரு நாயின் கண்ணீர் கலந்த வார்த்தைகள் இதோ,
வீடுகளிலும், தெருக்களிலும் வசிக்கும் எங்கள் இனத்தை சேர்ந்தவர்கள், மனித இனத்தை கடித்துவிட்டால், உடனடியாக அதற்கான தண்டனையை கொடுத்துவிடுகிறீர்கள்.
ஆனால், என்னதான் நீங்கள் எங்களை துன்புறுத்தினாலும் நன்றி உணர்வோடு உங்கள் கால்களை சுற்றி சுற்றி வலம் வருகிறோம். பல நேரங்களில் உங்களுக்கு பாதுகாவலனாக இருக்கும் எங்களுக்கு, நீங்களே எமனாக மாறுகிறீர்கள்.
அப்படி, நாங்கள் என்ன தவறு செய்துவிட்டோம், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த என்னை பிடித்து, எனது பிஞ்சு கால்களை உடைத்துவிட்டீர்கள்.
எனது கால்களை உடைத்த போது வலியால் துடித்த எனது குரல் உங்கள் நால்வரின் கால்களில் கேட்கவில்லையா? அதோடு நிறுத்திக்கொள்ளாமல், எனது முகத்தில் தீவைத்து எரித்தீர்கள். அப்படி எனது முகத்தின் மீது உங்களுக்கு என்ன கோபம்? நான் என்ன தவறு செய்தேன்.
மனித உயிர்களாகிய உங்களுக்கு வேதனை ஏற்பட்டால் அதனை கண்ணீர் மற்றும் வார்த்தைகளால் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி, மனதினை ஆற்றிக்கொள்கிறீர்கள்.
ஆனால், வாய் பேசமுடியாத நான், வேதனையால் எவ்வளவு குரைத்தும் எனது குரல் உங்கள் காதுகளில் ஒலிக்கவில்லையா?
ஆம், உங்களுக்கு எப்படி ஒலிக்கும்? நீங்கள் தான் அரக்க குணம் கொண்டவர்களாயிற்றே. ஆனால் எனது குரல் என்னை படைத்த அந்த ஆண்டவனின் காதில் கேட்டுள்ளது. அதனால் தான் எனது உடல் இவ்வளவு பாதிப்புகளை அடைந்தும் இந்த பூமியில் உயிர் வாழும் பாக்கியத்தை எனக்கு வழங்கியுள்ளான்.
என்னை போன்ற உயிரினங்களால் மனித இனத்திற்கு பாதிப்பு ஏதும் ஏற்பட்டால், அதற்கான தண்டனையை எங்களுக்கு வழங்குங்கள், அதனை ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால், அதற்காக உங்கள் பொழுது போக்கிற்காக எங்களை துன்புறுத்தி துன்பத்தில் இன்பம் அடைவதை நிறுத்தி கொள்ளுங்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating