கொதிக்கும் நீரில் துளசி மஞ்சள் கலந்து குடியுங்கள்: கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்…!!

Read Time:2 Minute, 50 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-5நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருந்தால், பலவித நோய்த்தொற்றுகள் பாதிக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.

எனவே நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க, கொதிக்கும் சுடுநீரில், துளசி மற்றும் மஞ்சளை கலந்து தினமும் குடித்து வர வேண்டும்.

இதனால் நமது உடம்பில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்திகள் அதிகரித்து, நோய்த்தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கச் செய்கிறது.

துளசி மஞ்சள் கலந்த பானத்தைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

துளசி கலந்த இந்த மூலிகை பானத்தை குடிப்பதால், நுரையீரலில் ஏற்படும் அழற்சி மற்றும் சளியின் தேக்கத்தை குறைத்து, அதிகப்படியான சளித் தொல்லையில் இருந்து நம்மை விடுவிக்கிறது.

இயற்கையான இந்த மூலிகை பானத்தில், மஞ்சள் மற்றும் துளசியை கலந்துக் குடிப்பதால், சுவாசப் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்து, ஆஸ்துமா நோய் வராமல் பாதுகாக்கிறது.

மன அழுத்தம் இருப்பவர்கள், தினமும் இந்த மூலிகை பானத்தைக் குடித்து வந்தால், மன அழுத்தம் குறைந்து, மூளையில் சீரான ரத்தோட்டம் நடைபெறும்.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், இந்த துளசி பானத்தை தினமும் குடித்து வந்தால், நமது உடலின் குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது.

அசிடிட்டி மற்றும் அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் இந்த மஞ்சள் கலந்த பானத்தை குடிப்பதால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

துளசி மற்றும் மஞ்சள் கலந்த மூலிகை பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை, தலைவலி, புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரூ.1 கோடி கேட்டு குழந்தையை கடத்தி கொன்ற சிறுவர்கள்…!!
Next post பாடகர் உதித் நாராயணன், உஷா கண்ணாவுக்கு முஹம்மது ரபி விருது: மத்திய மந்திரி வழங்கினார்…!!