தெற்காசிய விளையாட்டு 85 தங்கங்களுடன் இந்தியா முன்னிலை

Read Time:2 Minute, 30 Second

sports.1.jpg10-வது தெற்காசிய விளை யாட்டு போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். போட்டியின் 8-வது நாளான நேற்று 4-100 மீட்டர் ரிலேயில் இந்தியா வின் ஜகதீஸ்பாஸ்கி, சந்தீப், சமீர்மோன், விஷால் குழு தங்கம் வென்றது.

குண்டு எறிதல் போட்டியில் சோரட்விஜ் தங்கம் வென் றார். ஈட்டி ஏரிதலில் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்தது. பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் அனுராதா பிஸ்வான் முதலிடம் பிடித்தார். 400 மீட்டரில் பீஸ்கி தங்கம் வென்றார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பிரிஜா புதிய சாதனை படைத்தார். அவர் பந்தய தூரத்தை 34 நிமிடம் 27.13 வினாடிகளில் கடந்தார்.

பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் அஞ்சுஜார்ஜ் 6.42 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார். ஸ்குவாஸ் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதில் பெண்கள் பிரிவில் ஜோஸ்னாசின்னப்பா நேபாள வீராங்கனை குருங்கை 9-0, 9-1, 9-0 என்ற நேர் செட்டில் வென்றார்.

கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியா 25-12, 25-22, 25-12 என்ற நேர் செட்டில் வங்காள தேசத்தை தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. பெண்கள் பிரிவில் மாலத்தீவை 25-9, 25-10, 25-9 என்ற கணக்கில் இந்தியா தோற்கடித்தது.

நேற்றைய ஆட்ட முடி வில் இந்தியா 85 தங்க பதக்கத்துடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 21 தங்கங் களுடன் 2-வது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

sports.1.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 12 இந்தியர்கள் கைது: ஆலந்துக்கு இந்தியா கண்டனம்
Next post அதிபர் மகிந்தா ராஜபக்சே கூட்டரசில் 2 தமிழர் கட்சிகள் இணைந்தன!