சபாஷ் டாக்டர்….3D முறையில் குழந்தையின் முகம் மாற்றம்…!! வீடியோ

Read Time:2 Minute, 38 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-2இந்த 21ஆம் நுற்றாண்டான விஞ்ஞான உலகில் புதிய கண்டுப்பிடிப்புகள், ஆச்சரியங்கள் அதிலும் மருத்துவ துறையில் பல சாதனைகள் நடத்தப்படுகின்றன.

அப்படி ஒரு சாதனையை மருத்துவ துறையில் முகமாற்று சிகிச்சை நிபுணர் Dr. Meara செய்துள்ளார். அதை பற்றி அவரே கூறுகிறார்.

Alicia மற்றும் Matt Pietrok என்னும் தம்பதியினருக்கு கடந்த 2013ஆம் வருடம் பிப்ரவரி 12ஆம் திகதி இரட்டை குழந்தைகள் பிறந்தது.

Violet மற்றும் Cora என பெயரிடப்பட்ட அந்த குழந்தைகளில் Violet பிறக்கும் போதே Tessier facial cleft எனப்படும் முகச்சிதைவு நோயுடன் பிறந்தாள்.

இதனால் அவளின் முகத்தில் உள்ள கண்கள் தனியாக, மூக்கு வித்தியாசமாக என கோரமாக காட்சியளித்தது. அதை மருத்துவர் Weinstockயுடன் இணைந்து 3D-printing தொழில்நுட்பம் மூலம் சரி செய்ய நான் முடிவெடுதேன்.

அதன்படி முதலில் ஸ்கேன் எடுக்கப்பட்டு பின்னர் குழந்தை Violet ன் மண்டை ஓட்டை 3D தொழிநுட்பத்தில் பிரிண்ட் எடுத்தோம்.

இதன் மூலம் குழந்தையின் திசுவானது மூளையில் எந்த பகுதியை தாக்கியதால் இந்த வினோத நோய் வந்துள்ளது என எங்களால் கண்டறிய முடிந்தது.

பின்னர், அவள் முகத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கும் கண்களை அதன் எலும்புகள் மூலம் இணைப்பது பற்றி பரிசோதித்தோம்.

3D-printing தொழில்நுட்பம் மூலம் தாறுமாறாக இருந்த முகத்தின் எலும்புகளை ஒன்றாக இணைத்தோம்.

10 மணி நேரம் நடந்த இந்த ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. பிறக்கும் போது Violet கு இருந்த சிதைந்த முதத்தை முடிந்தளவு அழகாக ஆக்கியுள்ளோம்.

தற்போது அவள் நலமாக உள்ளார். தொடர் பரிசோதனையும் அவளுக்கு நடைபெற்று வருகிறது.

Violet என்ற அந்த குழந்தையும் எல்லா குழந்தையும் போல இந்த உலகை இனி எதிர்கொள்ளும் என சாதித்த பெருமிதத்தோடு கூறுகிறார் மருத்துவர் Meara !

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் தொழிலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி: பணி நீக்கம் செய்த காவல் துறை..!!
Next post பிஸ்தா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…!!