ராஜஸ்தானில் இளம்பெண்ணை சுட்டு கொன்று போலீஸ் சூப்பிரண்டு தற்கொலை…!!

Read Time:2 Minute, 33 Second

201612231357499387_teen-girl-shot-dead-by-police-superintendent-after-committed_secvpfராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ளது சிவதாசபுரா பகுதி. இங்கு புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகே நேற்று இரவு கார் ஒன்று நின்றது.

சிறிது நேரம் கழித்து இந்த காரில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். காருக்குள் ஒரு ஆணும், பெண்ணும் பிணமாக கிடந்தனர். கார் உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காரின் கதவை திறந்து பார்த்தபோது, உள்ளே இறந்து கிடப்பது ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அஜிஸ் பிரபாகர் (வயது 45) என்பது தெரிய வந்தது. அவருடைய ரிவால்வர் துப்பாக்கி அருகில் கிடந்தது.

அஜிஸ்பிரபாகர் தனது துப்பாக்கியால் அந்த பெண்ணை சுட்டு கொன்று விட்டு அவரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. அந்த பெண் யார்? எதற்காக அவரை கொன்று விட்டு தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை.

அஜிஸ் பிரபாகர் தனியாக ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் நடத்தி வந்தார். இந்த பெண் அந்த மையத்தில் படித்த மாணவியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களுக்குள் கள்ளக்காதல் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் நினைக்கின்றனர்.

இது சம்பந்தமாக விசாரணை நடந்து வருகிறது.

அஜிஸ் பிரபாகருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் அவர் படிப்புக்காக விடுமுறை எடுத்து விட்டு தற்போதுதான் பணியில் சேர்ந்து இருந்தார். அதற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனியார் ஆஸ்பத்திரியில் சகப் பணியாளர்களால் நர்ஸ் கற்பழிப்பு…!!
Next post நடிகர்கள் ரசிகர்களை மதிக்க வேண்டும்: ஷாருக்கான்…!!