மொசூல் நகர் அருகே அடுத்தடுத்து கார் வெடிகுண்டு தாக்குதல்: 23 பேர் பலி…!!

Read Time:1 Minute, 27 Second

201612221916306960_car-bombs-kill-23-in-former-isheld-town-near-mosul-iraq_secvpfஈராக் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல் நகரை மீட்பதற்காக அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். அமைப்பினருடன் ஈராக் படைகள் கடும் சண்டை நடத்தி வருகின்றன.

கடந்த அக்டோபர் மாதம் 17–ந் தேதி தொடங்கிய இந்த சண்டை காரணமாக மொசூல் நகரில் வசித்து வருகிற மக்கள் உயிர் பிழைப்பதற்காக அங்கிருந்து வெளியேறி வேறு இடங்களுக்கு சென்ற வண்ணமாக உள்ளனர்.

இந்நிலையில், மொசூல் நகர் அருகே ஐ.எஸ் பயங்கரவாதிகளில் பிடியில் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர்.

இது குறித்து அரசு படைகள் ஒருங்கிணைப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோக்ஜலி என்ற இடத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் மூன்று கார் வெடிகுண்டு தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 8 போலீசார் மற்றும் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆலிவ் ஆயிலைக் கொண்டு முகத்தில் மசாஜ் செய்வது நல்லதா?
Next post நுரையீரலை தானம் கொடுத்து வரலாற்றில் இடம்பிடித்த 41 நாள் குழந்தை…!!