யாழில் உடன் பிறந்த தம்பியை குத்தி கொலை செய்த அண்ணன்..!!

Read Time:1 Minute, 49 Second

ca04868d04a42b471df14ce559939851_1482224030-sயாழ். பருத்தித்துறை தும்பலை பகுதியில் ஒரு வீட்டில் அண்ணன் தம்பி மூவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் அண்ணன் தம்பியின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். சிவகுமார் சுவர்னன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த இளைஞர் மதுபோதையில் வீட்டிற்கு வந்து இரவு உணவு தொடர்பாக வீட்டில் இருந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, மூத்த சகோதரர்கள் தம்பியுடன் தகராறில் ஈடுபட்ட போது, அந்த தகராறு வாய்த்தர்கமாக மாறி கைகலப்பு ஏற்பட்டுள்ளது, இதனால் சகோதரன் தம்பியை கத்தியால் குத்தியுள்ளார். அதன்போது குருதி அதிகமாக வெளியேறியதன் காரணமாக இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சகோதரர் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சகோதரனை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். குறித்த கொலை தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்…!!
Next post ஆப்கானிஸ்தான் எம்.பி. வீட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு…!!