சூரியனைக் கடந்து செல்லும் மர்ம உருவம்: இணையத்தில் வைரலாகும் நாசா புகைப்படம்..!!

Read Time:2 Minute, 24 Second

201612221239151132_nasa-releases-stunning-image-of-the-international-space_secvpfஅமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்ட புகைப்படம் ஒன்று உலகளவில் வைரலாகி வருகிறது.

விண்வெளியில் சுற்றியபடியே கோள்களைப் பற்றிய ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இந்த ஆய்வு மையத்தில் இருந்து எடுக்கப்படும் புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அவ்வப்போது வெளியிடுகிறது.

அவ்வகையில், சூரியனை விமானம் போன்ற பொருள் ஒன்று கடப்பது போல புகைப்படம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. வெளியான ஒரே நாளில் இப்புகைப்படம் வைரலானாலும் சூரியனைக் கடப்பது பறவைகளா? இல்லை விமானமா? என்ற சந்தேகம் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை ஆறு பேர் அடங்கிய குழு, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வினாடிக்கு 5 மைல் வேகத்தில் சுற்றிக்கொண்டிருந்த சூரியனை படம் பிடித்தது. அதில் ஒரு புகைப்படத்தில் சூரியனை விமானம் ஒன்று கடப்பது போல பதிவாகியுள்ளது.

சரியான தருணத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை நாசா வெளியிட, தற்போது சூரியனைக் கடப்பது பறவையா? இல்லை ஏதாவது விமானமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருசிலர் இதனை வைத்து விவாதம் நடத்த வேறு சிலரோ இது போட்டோஷாப் முறையில் மாற்றப்பட்ட புகைப்படம் எனக் கூறுகின்றனர். இந்த புகைப்படத்தால் சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

இதற்கு முன் இதுபோன்ற பல்வேறு அபூர்வ நிகழ்வுகளை சர்வதேச விண்வெளி மையம் படம் பிடித்து அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!
Next post கோவையில் மூதாட்டியை கொலை செய்த மணிப்பூர் வாலிபர் கைது..!!