15 வயது சிறுமியை கற்பழித்த அகதி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

Read Time:2 Minute, 29 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-3சுவிட்சர்லாந்து நாட்டில் 15 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு விதித்து உத்தரவிட்டுள்ளது.

இத்தாலி நாட்டை சேர்ந்த ஹாசன் கிக்கோ(27) என்ற நபர் சுவிஸில் புகலிடம் கோரியுள்ள நிலையில் 15 வயதான சிறுமியை கற்பழித்த குற்றத்தற்காக சுவிஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சூரிச் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அங்கு காவல் பணியில் இருந்த Angela Magdici(32) என்ற பெண்ணுடன் ஹாசனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி இரவில் சிறை வளாகத்தில் சந்தித்து வந்துள்ளனர். மேலும், கடந்த பெப்ரவரி மாதம் கைதியை தப்பிக்க உதவிய அப்பெண் காவலர் அவருடன் சுவிஸ் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

சுவிஸ் நாட்டை அதிர வைத்த இச்சம்பவத்திற்கு பிறகு சுமார் 40 நாட்களுக்கு பிறகு இருவரும் இத்தாலி நாட்டில் கைது செய்யப்பட்டனர்.

ஹாசனை சூரிச் சிறையில் அடைத்த பொலிசார் அவர் மீதான கற்பழிப்பு விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஹாசன் மீதான இறுதி விசாரணை நேற்று சூரிச் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அப்போது, 2014-ம் ஆண்டு 15 வயதான சிறுமியை கற்பழித்தது உண்மை என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

மேலும், முன்னதாக ஹாசன் பல்வேறு குற்றங்களுக்காக ஏற்கனவே தண்டனை பெற்றவர் என்பதும் தெரியவந்தது.

ஹாசன் மீதான கற்பழிப்பு குற்றத்தை உறுதி செய்த நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 15,000 பிராங்க் இழப்பீடும் வழங்க வேண்டும் எனக் கூறி தீர்ப்பளித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 39000 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கப்போகும் பேரழிவு! ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்…!!
Next post மாணவர்களுடன் நிர்வாணமாக புகைப்படம் எடுத்த ஆசிரியை: புயலை கிளப்பும் சர்ச்சை…!!