நிலவில் நிலம் வாங்கிய கொல்கத்தா தம்பதி!

Read Time:2 Minute, 38 Second

Moon.jpgகொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் 100 டாலர் பணம் கொடுத்து நிலவில் 2 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர். நிலவைக் காட்டி குழந்தைகளுக்கு பால் சோறு ஊட்டிய காலம் மாறி, நிலவில் குடியேறும் நாள் எப்போது என்ற கனவுக்கு உலக மக்கள் மாறியுள்ளனர். இந்த நிலையில் நிலவில் 2 ஏக்கர் நிலத்தை வாங்கிப் போட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளனர் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர்.்.்.

கொல்கத்தாவின் ஹெளரா பகுதியில் வசிப்பவர் அனீஷ்தாஸ் குப்தா. இவரது மனைவி சோமா. டிராவல் ஏஜென்டாக பணியாற்றி வருகிறார் குப்தா. தீதீதீ.டூதணச்ணூணூஞுணீதஞடூடிஞி.ஞிணிட் என்ற இணைய தளத்தில், நிலவில் நிலம் வாங்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்ற தகவலைப் பார்த்து நிலம் வாங்க விண்ணப்பித்தார்.

அதன்படி 2 ஏக்கர் நிலத்தை 100 டாலர் கொடுத்து வாங்கியுள்ளார் குப்தா. கிரெடிட் கார்டு மூலம் பணத்தைக் கட்டிய குப்தாவுக்கு இப்போது நிலம் வாங்கியது தொடர்பான பத்திரங்களை அந்த இணையதளம் அனுப்பி வைத்துள்ளதாம்.

குப்தா வாங்கிய நிலம், நிலவில், டிராக்ட் 34 என்ற இடத்தில் உள்ளதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டள்ள தாம். குப்தா வாங்கிய நிலம் உள்ள பகுதி மலை மற்றும் கடலுக்கு சற்று தொலைவில் இருப்பதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

நிலவில் நிலத்தை வாங்கி ‘கிரயம்’ செய்துள்ளது குறித்து குப்தா கூறுகையில், ரஷ்யாவால் நிலவுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் போது, அங்கே வீடுகட்டி மனிதன் குடியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர்ந்ததால் தான் அங்கு நிலம் வாங்கும் முடிவுக்கு வந்தேன்.

மக்கள் என்னை நிலவு மனிதன் என்று அழைத்தால் நான் பெருமைப்படுவேன் என்கிறார் குப்தா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிரபாகரன் தங்கி இருக்கும் முல்லைத்தீவு பகுதியில் இலங்கை போர் விமானங்கள் குண்டு வீச்சு
Next post 12 இந்தியர்கள் கைது: ஆலந்துக்கு இந்தியா கண்டனம்