இந்த ஒரு தவறை திருத்திக் கொண்டால், தாம்பத்திய உறவில் சிறந்து செயல்பட முடியும்…!!

Read Time:3 Minute, 51 Second

askingthisquestionbeforelovemakingwillhelpyoutofeelflawlesscover-30-1480489303தொட்டில் பழக்கம், சுடுகாடு வரைக்கும் என்பார்கள். மனித வாழ்க்கையில் இது நிதர்சனம். பல முறை ஒரு பழக்கத்தால் தோல்வி அடைந்திருந்தாலும் கூட அதை மறுமுறை மாற்றிக் கொள்ள மாட்டோம். காதலில் பெரும்பாலும் நாம் செய்யும் தவறு தான் இது.

ஆனால், இந்த தவறை தாம்பத்திய உறவிலும் பலர் செய்வதால் தான், முழுமையான தாம்பத்திய உறவில் ஈடுபட முடிவதில்லை. மேலும், இந்த ஒரு தவறு தான் கணவன் – மனைவி உறவில் விரிசல் உண்டாகவும், மனக்கசப்பு அதிகரிக்கவும் காரணியாக இருக்கிறது.

அது என்ன தவறு? ஐ லவ் யூ? கேட்பதற்கு முன், டூ யூ லவ் மீ? கேளுங்கள் என்பார்கள். ஆம், எனக்கு விருப்பம் என அழைக்கும் முன்னர், உனக்கும் விருப்பமா என துணையிடம் கேட்க வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் நீங்க திருத்தம் கொண்டு வந்தால், தாம்பத்தியம் மட்டுமல்ல, உங்கள் இல்வாழ்க்கையும் சிறக்கும்.

சமநிலை! ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாத சமூகம் அமைய வேண்டும் என்பதை நாம் இலக்கியங்களில் இருந்து படித்து வந்தாலும், மேடைகளில் உரக்க கூறினாலும், கைகளில் தூசு படிந்தது போல கொஞ்சம் பலமாக தட்டிவிட்டு நகர்ந்து, மறந்து சென்றுவிடுவோம். பெண்களுக்கான சமநிலை, சமவுரிமை கொடுக்க வேண்டியது அவசியம்.

கேள்விகளை மாற்றுங்கள்! நான் இதை செய்ய போகிறேன், இதை செய், இது தான் நன்றாக இருக்கும் என்ற கேள்விகளுக்கு பதிலாக, உனக்கு இதில் விருப்பமா, நாம் இதை செய்யலாமா, இதுப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்ற கேள்விகளை கேளுங்கள்.

மகிழ்ச்சி பொங்கும்! ஒவ்வொரு பெண்ணும் தனது கணவனிடம் எதிர்பார்ப்பது இதை தான். சிக்ஸ் பேக் உடலோ, ஆறிலக்க சம்பளமோ அல்ல. உடலும், பணமும் விரும்பும் உறவிற்கு பெயர் வேறு என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.

எது கௌரவம்? மனைவியை மண்டியிட வைப்பது, மனைவி முன் மண்டியிட்டு நிற்பது இதுவா கெளரவம். இல்லறம் எனும் துலா பாரத்தில் கணவன் – மனைவி என்பவர் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து சமநிலையை காப்பது தான் கெளரவம்!

இன்றே இதை கடைப்பிடிக்கலாம்… இதை நாளை முதல் அமல்படுதுகிறேன், அடுத்த மாதத்தில் இருந்து அமல்படுத்துகிறேன் என தள்ளிப் போடாமல், வீண் அதிகார தோரணையை சற்று கழற்றி வைத்து, இன்று முதலே உங்கள் மனைவியிடம், இந்த மாற்றத்தை காண்பிக்க துவங்குங்கள். கண்டிப்பாக இல்லறம் இனிமை நிறைந்து காணப்படும்.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் மிக ஆபத்தான விமான நிலையம்: காற்றில் சிக்கிய சுவிஸ் விமானம்: உறைய வைக்கும் காட்சி…!! வீடியோ
Next post ஒரு கணவனுக்கு 15 நாட்கள்..11 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பலே பெண்: அதிரவைக்கும் வாக்குமூலம்…!!