ஆலிவ் ஆயிலைக் கொண்டு முகத்தில் மசாஜ் செய்வது நல்லதா?

Read Time:3 Minute, 42 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3பொதுவாக நாம் பயன்படுத்தும் எண்ணெய்களில், ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் மிகவும் சிறந்த எண்ணெயாக ஆலிவ் ஆயில் உள்ளது.

ஆலிவ் எண்ணெயில் மட்டும் தான் விட்டமின்கள், கனிமச் சத்துக்கள் மற்றும் நேச்சுரல் ஃபேட்டி ஆசிட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளதால், இந்த எண்ணெய் அனைத்து வகையான சருமத்தின் பராபரிப்புகளுக்கும் ஏற்றதாக உள்ளது.

எனவே ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் தூங்குவதற்கு முன் நம்முடைய முகத்தில் தடவி, நன்கு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் எழுந்து முகத்தைக் கழுவி வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.

ஆலிவ் ஆயில் மூலம் மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஆலிவ் ஆயிலில் இருக்கும் விட்டமின் E, நமது சரும செல்களின் சீரற்ற தன்மை மற்றும் சருமம் விரைவில் முதுமைத் தோற்றம் அடைவதைத் தடுக்கிறது.

ஆலிவ் ஆயிலில் உள்ள ஸ்குவாலின் அமிலம், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, சருமம் தளர்வதைத் தடுத்து, எப்போதும் இளமையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

வறட்சியான சருமம் இருப்பவர்கள், ஆலிவ் ஆயிலைக் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சரும வறட்சி மறைந்து, நல்ல பலன் கிடைக்கும்.

எந்த வகையான மசாஜ் செய்தாலும் நமது உடம்பின் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிலும் தினமும் இரவில் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, பொலிவான முகத்தின் அழகு கிடைக்கும்.

ஆலிவ் ஆயிலில் தினமும் மசாஜ் செய்து வருவதால், அது நம்முடைய சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் நமது முகத்தில் பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பித்து, எப்போதும் முகத்தை புத்துணர்ச்சியுடன் அழகாகவும் பாதுகாக்கிறது.

நமது முகத்தில் ஏதேனும் நாள்பட்ட தழும்புகள் மறையாமல் இருந்தால், அதனைப் போக்க தினமும் இரவில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் தழும்புகள் இருக்கும் சருமத்தின் இடத்தில் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, தழும்புகளை மறையச் செய்கிறது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விக்ரம் ஜோடியான பிரேமம் நாயகி…!!
Next post மொசூல் நகர் அருகே அடுத்தடுத்து கார் வெடிகுண்டு தாக்குதல்: 23 பேர் பலி…!!