பவானி புதிய பஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் படுகொலை…!!

Read Time:3 Minute, 42 Second

201612211126214203_auto-driver-killed-in-bhavani-new-bus-stand_secvpfஈரோடு மாவட்டம் பவானி பழனிபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 28). ஆட்டோ டிரைவர்.

இவரது நண்பர் அன்பு. இவர் பவானி புதிய பஸ் நிலையத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கும் பவானி வர்ணாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்தது.

இந்த நிலையில் அன்புவும் சசிக்குமாரும் சேர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கார்த்தியை கொலை செய்தனர். பவானி போலீசார் அப்போது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

பிறகு இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர். கொலையாளிகள் 2 பேர் வெளியே வந்து சுற்றுவதை கண்டு கொலை செய்யப்பட்ட கார்த்திக்கின் தம்பி சந்திர சேகரனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இருவரையும் தீர்த்து கட்ட கங்கணம் கட்டி கொண்டிருந்தார். அதற்கான நேரத்தையும் எதிர் பார்த்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு சந்திரசேகர் தனது நண்பர் பிரகாசுடன் பவானி புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ஆட்டோ டிரைவர் சசிகுமாரும் வந்தார். அவரை கண்டதும் சந்திர சேகருக்கு கோபம் தலைக்கு ஏறியது. தனது அண்ணனை கொன்ற இவனை தீர்த்து கட்ட நேரம் வந்து விட்டது என்று எண்ணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த சசிகுமார் மீது பாய்ந்தார்.

இதை கண்டதும் உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்தார். எனினும் சந்திரசேகர் விடவில்லை. புதிய பஸ் நிலையம் பகுதியில் அவரை கத்தியுடன் விரட்டினார்.

மக்கள் நடமாட்டம் மிகந்த இடத்தில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் பயந்து ஓடினர்.

அப்பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். முன் சசிக்குமாரை மடக்கிய சந்திரசேகர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

10-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தி குத்து விழுந்ததால் சசிகுமார் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதை கண்ட சந்திர சேகரும் அவரது நண்பர் பிரகாசும் தப்பி ஓடி விட்டனர்.

இந்த சம்பவம் பவானி நகரையே உலுக்கி உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சசிகுமாரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

இந்த கொலை சம்பவம் குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய சந்திர சேகரையும் அவரது நண்பர் பிரகாசையும் வலை வீசி தேடி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட சசிகுமாருக்கு சரண்யா என்ற மனைவுயும் 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெக்சிகோவில் பட்டாசு மார்க்கெட்டில் தீ விபத்து: 29 பேர் பலி…!!
Next post டெல்லியில் சொகுசுகாருக்குள் 17 வயது இளம்பெண் சுட்டுக்கொலை…!!