எனது படங்களில் கதாநாயகிகளின் ஆபாச காட்சிகள் இருக்காது: விஷால்…!!

Read Time:2 Minute, 55 Second

201612201009317625_my-films-are-not-the-heroine-glamour-vishal_secvpfவிஷால்-தமன்னா ஜோடியாக நடித்துள்ள படம் கத்தி சண்டை. சுராஜ் டைரக்டு செய்துள்ளார். எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார். இந்த படம் குறித்து விஷால் அளித்த பேட்டி வருமாறு:-

“நான் நடித்துள்ள கத்தி சண்டை படம் தீபாவளிக்கு வர வேண்டியது. கார்த்தியின் காஷ்மோரா வந்ததால் தள்ளிவைக்கப்பட்டு இப்போது திரைக்கு வருகிறது. தமிழில் 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்படுகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலும் வெளியாகிறது.

வடிவேல் சினிமாவில் ஒரு சகாப்தம். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் அவர் நடித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இல்லாமல் கத்தி சண்டை படம் இல்லை. கதையை கேட்டதும் ஒப்புக்கொண்டார். வடிவேலுவின் மறுபிரவேசத்தை எல்லோருமே ஆர்வமாக எதிர்பார்த்தனர். அது என் படம் மூலம் நடந்து இருப்பது பெருமை அளிக்கிறது. அவர் பூத்ரி என்ற மனோதத்துவ டாக்டராக இதில் வருகிறார்.

நகைச்சுவைக்கு படத்தில் பஞ்சமே இருக்காது. முதல்பாதியில் சூரியும் இரண்டாம் பாதியில் வடிவேலுவும் வருகிறார்கள். தமன்னா அழகான நடிகை. எங்களுடைய ஜோடி இந்த படத்தில் புதுசாக இருக்கும். தமன்னா கவர்ச்சியாக வருகிறாரா? என்று கேட்கிறார்கள். அவர் கவர்ச்சியாகவோ நீச்சல் உடையிலோ இதில் நடிக்கவில்லை. பாடல் காட்சியில் எவ்வளவு கவர்ச்சி தேவையோ அந்த அளவுக்கு நடித்து இருக்கிறார்.

எனது படங்களில் இதுவரை கதாநாயகிகளின் முகம் சுழிக்கும் ஆபாச காட்சிகள் இருந்தது இல்லை. இனிமேலும் இருக்காது. இந்த படத்தில் சமூக பிரச்சினை ஒன்றையும் வைத்து இருக்கிறோம். திரையரங்குகளுக்கு ஆட்டோக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் குடும்பத்தோடு படம் பார்க்க வர முடியவில்லை என்று ஆட்டோ டிரைவர்கள் பலர் என்னிடம் வருத்தப்பட்டனர். அனைத்து திரையரங்கு உரிமையாளர்களிடமும் பேசி ஆட்டோக்களை உள்ளே அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்ள இருக்கிறோம்.”

இவ்வாறு விஷால் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வைரஸ் காய்ச்சலா? உடனே இதனை செய்து விடுங்கள்…!!
Next post ரொமென்ஸும் காதலும் ஒன்றா? இதற்கான வித்தியாசம் என்ன?