அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்புக்களைப் போக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…!!

Read Time:4 Minute, 49 Second

19-1482131221-1-teatreeoilஅந்தரங்க பகுதி சுகாதாரம் என்பது ஒருவருக்கு மிகவும் இன்றியமையாதது. பெண்களை விட ஆண்கள் தங்களது அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை என்று தான் கூற வேண்டும். இதனால் தான் ஆண்கள் எப்போதும் அந்தரங்க உறுப்பில் அரிப்பை அனுபவிக்கின்றனர்.

ஆனால் இப்படி அந்தரங்க உறுப்பில் அரிப்பு ஏற்படும் போது, அதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை எடுத்து வராவிட்டால், பின் அவ்விடத்தில் காயம் ஏற்பட்டு, இரத்தக்கசிவை உண்டாக்கி, தொற்றுக்களை உண்டாக்கும். ஆரம்பத்திலேயே இயற்கை வழிகளின் மூலம் சிகிச்சை மேற்கொண்டால், விரைவில் அரிப்புக்களைப் போக்கலாம். சரி, இப்போது அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்புக்களைப் போக்கும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

டீ-ட்ரீ ஆயில் இந்த எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது அரிப்புக்களைப் போக்குவதுடன், அவ்விடத்தை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும். அதற்கு சுத்தமான டீ-ட்ரீ ஆயிலை 3 துளிகள் எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். பின் ஒரு பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி, அந்த எண்ணெயை அந்தரங்க பகுதியில் தடவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், விரைவில் அரிப்புக்கள் அடங்கும்.

கற்றாழை கற்றாழை ஜெல்லை ஒரு ஸ்பூனில் எடுத்து, அதனை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, பின் அந்தரங்க பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் தடவி மசாஜ் செய்து வர அரிப்புக்களை அடங்கிவிடும்

தேன் தேனில் ஆன்டி-செப்டிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் உள்ளது. இது அரிப்புக்களைக் குறைப்பதோடு, வெட்டுக் காயங்களை விரைவில் குணமடையச் செய்து, வேகமாக சரிசெய்யும். அதற்கு தேனை அந்தரங்க பகுதியில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வர, அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்புக்கள் போய்விடும்.

பூண்டு பூண்டில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளது. இது அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்புகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும். அதற்கு 5-6 பூண்டு பற்களை எடுத்துக் கொண்டு, 1/2 கப் ஆலிவ் ஆயிலில் போட்டு ப்ரை செய்ய வேண்டும். பூண்டின் நிறம் மாறிய பின், அதனை இறக்கி எண்ணெயை குளிர வைத்து, அந்த எண்ணெயை அரிப்புள்ள இடத்தில் தடவி 2 மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், அரிப்புக்கள் வேகமாக அடங்கும்.

வினிகர் ஒரு கப் வினிகரில் 4 கப் நீரை சேர்த்து கலந்து, அந்நீரால் அந்தரங்க உறுப்பை கழுவ வேண்டும். இப்படி தினமும் கழுவி வர, அந்தரங்க பகுதியில் அரிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

ஆல்கஹால் ஆல்கஹாலை காட்டனில் நனைத்து, தினமும் சில முறை தடவி வர, அதில் உள்ள உட்பொருட்கள் விரைவில் அந்தரங்க பகுதியில் உள்ள தொற்றுக்களை நீக்கி, அரிப்பைப் போக்கும்.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளிர்காலத்தில் உதடுகளை பாதுகாப்பதற்கான வழிகள்…!!
Next post பார்க்கத் தான் தம்மாத்துண்டு ஆட்டத்தைப் பாருங்க..!! வீடியோ