உங்கள் முகத்தில் எண்ணெயா? இதோ அருமையான டிப்ஸ்…!!

Read Time:3 Minute, 29 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-9வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், நமது சருமத்தில் பலவித பிரச்சனைகள் நீடித்து கொண்டே செல்கிறது.

இதனால் நமது முகத்தின் அழகு குறைந்து, சருமத்தில் எண்ணெய் வழிந்தவாறு இருக்கிறது. எனவே நமது முகம் கருமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

நமது முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதைத் தடுத்து, நமது சருமம் பளபளக்க ஏராளமான இயற்கை வழிகள் இதோ,

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள் மற்றும் பால் ஆகிய இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர வைத்துக் கழுவ வேண்டும். இதேபோல் தினமும் செய்து வந்தால், நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை நமது சருமத்தின் pH அளவை தக்க வைத்து, புத்துணர்ச்சியை அளிக்கிறது. எனவே எலுமிச்சை சாறுடன், சிறிது நீர் சேர்த்துக் கலந்து, காட்டன் பயன்படுத்தி முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

பப்பாளி

தினமும் பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்துக் கழுவி வர வேண்டும். இதனால் நமது முகத்தில் எண்ணெய் வழிவது தடுக்கப்பட்டு, முகம் பளபளப்பாக இருக்கும்.

சோள மாவு

சோள மாவானது, நமது சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் குறைக்கும் தன்மைக் கொண்டது.எனவே சிறிது சோள மாவுடன், தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தக்காளி

தக்காளியில் விட்டமின் C மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இதனால் தக்காளி சருமத்தின் துளைகளை இறுக்கமடையச் செய்து, எண்ணெய் வழிவதைக் கட்டுப்படுத்துகிறது. தக்காளியை அரைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.

கற்றாழை

தினமும் கற்றாழையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி வந்தால், முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்பட்டு, நமது முகம் எப்போதும் பொலிவாக இருக்கும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் தனுஷ்…!!
Next post டி.என்.பாளையம் அருகே 3 முகத்துடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி…!!