மொடக்குறிச்சி அருகே பெண்ணை தாக்கி நகை-பணம் கொள்ளை…!!

Read Time:2 Minute, 49 Second

201612171602554974_woman-attacked-jewel-cash-robbery-modakurichi_secvpfமொடக்குறிச்சி அருகே உள்ள பஞ்சலிங்கபுரம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் சங்கர மூர்த்தி. இவர் சொந்தமாக லாரி வாங்கி ஓட்டி வருகிறார். இவரது மனைவி சிவகாமி.இவர்களது மகன் ரஞ்சித் குமார். இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

ரஞ்சித் குமார் நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டார். இதனால் சங்கர மூர்தியும் அவரது மனைவி சிவகாமியும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினர். முன் அறையில் சங்கர மூர்த்தியுடன் அவருடன் வேலை பார்க்கும் லாரி டிரைவா ரமேஷ் என்பவர் படுத்து இருந்தார்.

அப்போது நள்ளிரவில் 1 மணி அளவில் வீட்டுக்குள் ஏதோ சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு விழித்த சிவகாமி இருட்டில் 2 பேர் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் திருடன் திருடன் என்று சத்தம் போட்டார்.

இதனால் கொள்ளையர்கள் சிவகாமியை தாக்கி கீழே தள்ளினர். இதன் பிறகு அவர் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் எடையுள்ள 2 தங்க செயின்களை பறித்தனர்.

முன்னதாக அவர்கள் பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரத்தையும் திருடி கொண்டு ஓடினர். இவர்களை சங்கரமூர்த்தி, லாரி டிரைவர் ரமேஷ் மற்றும் சிவகாமி ஆகியோர் விரட்டி சென்றனர்.

அப்போது 2 பேரில் ஒருவன் வீட்டுக்கு வெளியே நின்ற சங்கர மூர்த்தியின் மோட்டார் சைக்கிளை ஓட்டி கொண்டு சென்றான். இன்னொரு ஆசாமி மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வேகமாக ஓடி னான்.

அப்போது மோட்டார் சைக்கிள் பழுதாகி நின்று விட்டது. இதனால் மோட் டார் சைக்கிளில் சென்ற ஆசாமி அங்கேயே மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பினான். அதன் பின்னால் ஓடிய ஆசாமியும் தப்பி சென்றுவிட்டான்.

இது பற்றி மொடக்குறிச்சி போலீசார் வழக்ப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் மொடக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு: 13 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு…!!
Next post ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியலில் வெற்றிடமா? கட்டுரை