ராஜபாளையத்தில் 30 மில்லி கிராம் தங்கத்தில் செய்யப்பட்ட தீப விளக்கு…!!

Read Time:1 Minute, 45 Second

201612161727328927_rajapalayam-torch-lamp-at-30-mg-gold_secvpfதிருக்கார்த்திகையை முன்னிட்டு ராஜபாளையத்தை சேர்ந்த வாலிபர் சமுத்திரக்கனி என்பவர் தங்கத்தில் மிககுறைந்த எடையான முப்பது மில்லி கிராம் எடையில் தீப விளக்கு செய்து அதில் தீபம் ஏற்றி எரிய விட்டு சாதனை நிகழ்த்தினார்.

ராஜபாளையம் கூரைப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சமுத்திரக்கனி (வயது41). தங்க நகை ஆபரண வடிவமைப்பாளரான இவர் 2007-ம் ஆண்டு 44 மில்லி கிராம் எடையில் உலக கிரிக்கெட் கோப்பையும்-2011-ல் தேசியகொடியும்-2015-ல் ஒரு கிராமில் மின் விசிறியும்- இரண்டு செண்டிமீட்டர் நீளத்தில் டார்ச் லைட்டும் தங்கத்திலும் 2007-ல் குறைந்த எடையில் வெள்ளியினாலான ஹெல்மெட்டும் செய்து காண்பித்து சாதனை நிகழ்த்தியவர் ஆவார்.

இந்த நிலையில் திருக்கார்த்திகையை முன்னிட்டு தங்கத்தில் முப்பது மில்லி கிராம் எடையில் கால் செ.மீ. உயரத்தில் தீப விளக்கு செய்து அதில் எண்ணெய் ஊற்றி தீபமும் ஏற்றி எரிய விட்டு சாதனை படைத்தார்.

இந்த சிறிய அரிய விளக்கை கேள்விப்பட்ட சுற்று வட்டார பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து ஆச்சரியப்பட்டு சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோடியக்கரையில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்…!!
Next post திருமண ஆசைகாட்டி மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது…!!