வட கொரியாவில் கொடூரம்…கண்ணீர் விட்டு கதறும் குழந்தைகள்: மனிதாபிமானமற்ற அரசு…!!

Read Time:2 Minute, 53 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-3வடகொரியாவில் குழந்தைகளை கடும் வெயிலில் இரும்பு தண்டவளப் பாதைகளில் உள்ள பழுதுகளை சரிசெய்ய வைப்பது, கற்களை உடைக்க வைப்பது போன்ற வேலைகளை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தும் செயல் பார்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வட கொரியாவின் தற்போதைய அதிபராக உள்ளவர் Kim Jong-un. இவர் அண்மையில் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஏவுகணைகள் மற்றும் அணுஅயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் Kim Jong-un தான் செய்வது தான் சரி என்பது போல் இது போன்ற சோதனைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் உலக நாடுகள் மத்தியில் தாங்கள் வலிமையானவர்கள் என்றும் குறிப்பாக அமெரிக்கா, தென்கொரியா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுவரை மூன்று சோதனைகளை செய்துள்ள அந்த அரசு நான்காவது அணு ஆயுத சோதனையை வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வட கொரியாவில் சுமார் ஐந்து முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகள் ஏராளமானோர் கடும் வெயிலில் அங்குள்ள இரயில்வே தண்டவாளங்களில் உள்ள பழுதுகளை சரி பார்க்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் அவர்கள் அங்குள்ள மலைகளை சிறிது சிறிதாக சுத்தியல் கொண்டு பெயர்த்து எடுக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாள் ஒன்றிற்கு அவர்கள் பத்து மணி நேரம் வரை வேலை செய்வதாக கூறப்படுகிறது.

இக்குழந்தைகள் வேலை செய்யும் இடம் அந்த நாட்டு அதிபர் Kim Jong-un இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு சில குழந்தைகள் வேலை செய்யும் போது வலி தாங்க முடியாமல் அழும் காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வடகோரியாவின் சர்வாதிகாரம் என்றும் மனித உரிமை மீறல்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீப்பற்றி எரியும் கட்டிடத்திலிருந்து குழந்தையை காப்பாற்றும் ரியல் ஹீரோ…!!
Next post கயத்தாறு அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து: 8 பேர் காயம்…!!