இனிமேல் மொத்த கிரகங்கள் 8 தான் `கிரகம்’ என்ற அந்தஸ்தை புளூட்டோ இழந்தது

Read Time:2 Minute, 16 Second

Pluto.jpgமொத்த கிரகங்கள் 8 தான் என்ற முடிவுக்கு சர்வதேச வானியல் நிபுணர்கள் வந்துள்ளனர். அதன்படி, கிரக அந்தஸ்தை புளூட்டோ இழந்துவிட்டது. சூரியக்குடும்பத்தில் புளூட்டோவுடன் சேர்ந்து இதுவரை 9 கிரகங்கள் இருப்பதாக வானியல் நிபுணர்கள் கணித்து இருந்தனர். புளூட்டோ கிரகம் கடந்த 1930-ம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கிரகம் பற்றி நீண்ட நாட்களாக சர்ச்சை இருந்து வந்தது. இந்த நிலையில் செக் குடியரசு நாட்டின் பராகுவேயில் சர்வதேச வானியல் நிபுணர்கள் மாநாடு நடைபெற்றது. 75 நாடுகளை சேர்ந்த ஏறத்தாழ 2,500 அறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில், எவை தனி கிரகங்கள்? எவை கிரகங்கள் அல்ல என்பதற்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அதன்படி, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புளூட்டோ கிரக அந்தஸ்தை இழந்துவிட்டது. தனி சுற்று வட்டப்பாதை இன்றி, நெப்டிïன் கிரக வளையத்துக்குள் புளூட்டோ வருவதால் தானாகவே தனிகிரக அந்தஸ்தை இழந்துவிட்டதாக வானியல் அறிஞர்கள் அறிவித்து உள்ளனர்.

8 கிரகங்கள்

இனி, புளூட்டோ புதிய பிரிவான `குட்டி கிரக’ பிரிவில் சேர்க்கப்படும். அத்துடன், சூரியனை சுற்றிவரும் எண்ணற்ற விண்கற்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவை சூரிய குடும்பத்தின் சிறிய அமைப்புகளாக கருதப்படும்.

இனி மொத்த கிரகங்கள் மெர்குரி(புதன்), வீனஸ்(வெள்ளி), பூமி, மார்ஸ் (செவ்வாய்), ஜுபிடர் (வியாழன்), சனி, யுரேனஸ் மற்றும் நெப்டிïன் ஆகிய 8தான் என்றும் வானியல் அறிஞர்கள் அறிவித்து உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சீனாவில் 107 வயது மூதாட்டிக்கு “பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டது
Next post 29 பேர் படுகொலை சம்பவம்: பிரேசில் போலீஸ்காரருக்கு 543 ஆண்டு சிறை தண்டனை