முட்டையின் மஞ்சள் கரு நல்லதா? கெட்டதா?

Read Time:3 Minute, 50 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-8சில விஷயங்களை நாம் பின்பற்றி, மிக கட்சிதமாக கடைப்பிடித்து வருவோம். அந்தவகையில் பலர் ஏன்? எதற்கு? என தெரியாமல் ஒதுக்கும் உணவு முட்டையின் மஞ்சள் கரு.

முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் இருக்கிறது என ஒதுக்கும் அதே நபர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும், கொலஸ்ட்ராலில் எச்.டி.எல், எல்.டி.எல் என இரண்டு வகை இருக்கின்றன. இதில் எல்.டி.எல் கொலஸ்ட்ரால் தான் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை.

சத்துக்கள்:

முட்டையின் மஞ்சள் கரு உண்மையில் ஆரோக்கியமான ஒன்று. அதை நாம் கொலஸ்ட்ரால், கொழுப்பு என்ற ஒற்றை காரணம் காட்டி தவிர்த்து வருகிறோம். ஆனால், முட்டையின் மஞ்சள் கருவில் நிறைய வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் இருக்கின்றன.

வைட்டமின்: எ, டி, கே, ஈ. மற்றும் பி

மினரல்ஸ்: கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், ஜின்க்.

கொலஸ்ட்ரால்:

முட்டையில் கொலஸ்ட்ரால் இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால், நமது உடலில் செல் சவ்வு வளரவும், சில ஹார்மோன் சுரக்கவும் கொலஸ்ட்ரால் சிறிதளவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முட்டையின் மஞ்சள் கருவின் மூலம் நமது உடல் பெரும் கொலஸ்ட்ரால் எச்.டி.எல் எனப்படும் ஆரோக்கியமான கொலஸ்ட்ரால்.

மூளை ஆரோக்கியம்:

முட்டையின் மஞ்சள் கருவின் மூலம் நமது உடலுக்கு கிடைக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் உடல் ஆரோக்கியம் sசிறக்கவும் மற்றும் மூளையின் ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது.

வாரத்திற்கு எவ்வளவு?

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முட்டை (மஞ்சள் கருவுடன்) சாப்பிடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடல்நலக் குறைபாடு ஏற்படுவதை தடுக்கும். இது உங்கள் வாழ்வியலில் நல்ல மாற்றத்தை உண்டாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆய்வுகள்:

பல ஆய்வறிக்கைகளில் முட்டையின் மஞ்சள் கரு உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் உணவு என்றும். அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போதும். அதற்கு ஏற்ற உடல் வேலை அல்லது உடற்பயிற்சி செய்யாத போதிலும் தான் இது தீங்காக மாறுகிறது என கூறப்பட்டுள்ளது.

எது தீங்கு?

பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கையாக தயாரிக்கப்படும் உணவுகள் மற்றும் எல்.டி.எல் கொலஸ்ட்ரால் உள்ள உணவுகள் தான் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. எனவே, இனிமேலும் மஞ்சள் கருவை கொழுப்பு, கொலஸ்ட்ரால் காரணம் காட்டி ஒதுக்க வேண்டாம்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சக பெண் ஊழியருக்கு பாலியல் சித்திரவதை: தூதரக அதிகாரி மீது அதிரடி நடவடிக்கை…!!
Next post பாரீஸ் தாக்குதல் எதிரொலி: பிரான்சில் நெருக்கடி நிலை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பு….!!