என்ன செஞ்சாலும் முகம் வறண்டு எரிச்சல் தருகிறதா? இதை ட்ரை பண்ணிட்டு அப்பறம் சொல்லுங்க…!!

Read Time:2 Minute, 28 Second

face_cream_001-w245சருமம் என்ன செய்தாலும் வறண்டு போய்விடும் இந்த குளிர்காலத்தில். குறிப்பாக கை, கால் சுருக்கமடைந்து எரியும். இதற்கு எத்தனை தடவைதான் மாய்ஸ்ரைஸர் உபயோகப்படுத்துவது என அலுத்துக் கொள்கிறீர்களா?.

கடைகளில் விற்கும் க்ரீம் தற்போதைக்கு ஆறுதல் அளித்தாலும் அதிலுள்ள ரசாயனங்கள் சருமத்தை மேலும் வறட்சியாக்கும். இங்கே சொல்லப்பட்டிருக்கும் ரெசிபி ட்ரை பண்ணுங்க. பிறகு சொல்லுங்க.

தேவையானவை: சுத்தமான தேங்காய் எண்ணெய் – கால் கப், கோகோ பட்டர் – முக்கால் கப், ஆலிவ் எண்ணெய் – 2 ஸ்பூன், வாசனை எண்ணெய் – சில துளிகள்.

வறண்ட சருமத்தில் செயல் புரியும்: சுத்தமான தேங்காய் எண்ணெய் உறையும் இது உடலுக்கு தேவையான ஈரப்பதத்தை தரும். கோகோ பட்டர் சரும செல்களுக்கு போஷாக்கும், ஆலிவ் எண்ணெய் பொலிவையும் தரும். வாசனை எண்ணெய் பாதாம், லாவெண்டர் என ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்.

செய்முறை: முதலில் எல்லாவ்ற்றையும் ஒன்றாக கலந்து லேசாக சூடுபடுத்துங்கள். பிறகு ஆற வைத்து அந்த எண்ணெயை சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள்.

பலன்: தினமும் காலை மாலை என இரு வேளை தடவினால் அன்று முழுவதும் சருமம் வறட்சி அடையாமல் மிருதுவாகவும் பொலிவாகவும் இருக்கும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சக்தி வாய்ந்த வயாகரா வீட்டிலேயே தயாரிக்கலாம்…!!
Next post விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்…!! விமர்சனம்