புயலின் வேகம் தாங்காமல் பஸ்சின் கண்ணாடி உடைந்தது…!!

Read Time:4 Minute, 4 Second

201612130945057504_speed-of-the-storm-bus-glass-is-broken_secvpfவார்தா புயல் காரணமாக சென்னையில் நேற்று காலை முதல் இரவு வரையிலும் பலத்த சூறைகாற்றுடன் கன மழை பெய்தது. தரமணி டான்சி நகர், ராஜலட்சுமி நகர் பகுதிகளில் சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியது. இதனால் அந்த பகுதிகளில் வாகனங்கள் தத்தளித்தப்படி சென்றன.

தரமணி இணைப்பு சாலையில் இந்தியன் வங்கி அலுவலகம் மீது பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனால் இந்தியன் வங்கி பெயர் பலகை விழுந்து நொறுங்கியது. கோயம்பேட்டில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி மாநகர அரசு பஸ் ஒன்று வந்தது. சென்னை பல்கலைக்கழக நுழைவு வாயில் அருகே பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு பஸ்சை அண்ணா சதுக்கம் நோக்கி சாலையில் திருப்ப முயன்றபோது பேய்க்காற்று பலமாக வீசியது.

இதனால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி வெளிப்பக்கமாக உடைந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பஸ் டிரைவர் எந்த வித காயமும் இன்றி தப்பினார்.

கிண்டி, பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் ஒடிந்து விழுந்த சாலைகள் மற்றும் தெருக்களில் இளைஞர்கள் தாங்களாவே முன்வந்து மரக்கிளைகளை அகற்றினர். சில பகுதிகளில் இளைஞர்களும், பொதுமக்களும் போக்குவரத்துக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் தன்னார்வத்துடன் ஈடுபட்டனர்.

வாகனங்கள் செல்ல முடியாத தெருக்கள் வழியாக செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்.

வளைத்து அடித்த காற்றால் பெரும்பாலான மாநகர அரசு பஸ் நிறுத்தங்களின் மேற்கூரை பறந்தது. சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் மேற்கூரை காற்றில் பறந்தது. கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் மார்க்கத்தில் உள்ள கஸ்தூரிபாய் நகர் ரெயில் நிலையத்தில் கண்ணாடி கூரைகள் விழுந்து நொறுங்கியது.

இதேபோல ரெயில் நிலைய பெயர் பலகையும் வைக்கப்பட்டிருந்த சுவரும் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் அந்த சமயத்தில் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பறக்கும் ரெயில் நிலைய மார்க்கத்தில் உள்ள பெரும்பாலான ரெயில் நிலைய மேற்கூரைகள் காற்றில் பறந்தன. தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலிலும் கண்ணாடிகள் உடைந்து காற்றில் பறந்தன.

சூறைகாற்று மற்றும் மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்து சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சில ஆட்டோ டிரைவர்கள் அதிக கட்டணம் வசூலித்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.பெரும்பாலான ஓட்டல்கள் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சிரமப்பட்டனர். அதே சமயத்தில் பெரும்பாலான பகுதிகளில் மருந்து கடைகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டிருந்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெடிகுண்டு மிரட்டல்: 530 பேருடன் ஜெர்மனி சென்ற விமானம் நியூயார்க்கில் அவசரமாக தரையிறக்கம்…!!
Next post முடி நீளமாக வளரச் செய்ய இதோ எளிய வழி! மிஸ் பண்ணிராதிங்க?