சிரியா: ரஷியா விமானப்படைகள் ஆவேச தாக்குதல் – ஐ.எஸ். தீவிரவாதிகள் தப்பியோட்டம்…!!

Read Time:2 Minute, 1 Second

201612111428441881_is-withdraws-from-syria-palmyra-after-heavy-russian-raids_secvpfசிரியா நாட்டிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க பல பழங்கால நினைவுத்தூண்களையும், நினைவுச் சின்னங்களையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த சில மாதங்களாக அழித்தொழித்து நாசப்படுத்தி வந்தனர். எஞ்சியிருக்கும் சில கலைப் பொக்கிஷங்களயாவது காப்பாற்றும் நோக்கத்தில் அரசுக்கு ஆதரவான போராளி குழுக்களுடன் ஒன்றிணைந்து இங்கு ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சிரியா ராணுவத்தினர் மூர்க்கமாக போரிட்டு வந்தனர்.

கடந்த மார்ச் மாதம் பால்மைரா நகரின் கிழக்கு நுழைவாயில் வழியாக முன்னேறிச் சென்ற அரசுப் படைகள், அங்கிருந்த தீவிரவாதிகளை புறமுதுகிட்டு ஓடவைத்து பால்மைரா நகரை முழுமையாக கைப்பற்றியுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

ஆனால், அலெப்போ நகரில் தற்போது நடைபெற்றுவரும் உச்சகட்டப் போரில் தீவிரம் காட்டிவரும் அரசுப்படைகள் அசந்திருந்த நேரத்தில் பால்மைரா நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று மீண்டும் கைப்பற்றினர்.

அவர்களிடம் இருந்து அந்த பகுதியை மீட்பதற்காக ரஷியா நாட்டு போர் விமானங்கள் நேற்று பின்னிரவு ஆவேச தாக்குதல்களை நடத்தின. இந்த தாக்குதல்களில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பால்மைரா நகரை விட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் தப்பியோடி விட்டதாகவும் சிரியா ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஜித்தை தொடர்ந்து தன் கடமையை திரிஷாவும் செய்து முடித்தார்…!!
Next post குங் பூ பாண்டாவையும் மிஜ்சும் ஜப்பான் குழந்தையின் மங்கி ஸ்டைல் டான்ஸ்…!! வீடியோ