வேலைக்குச் செல்லும் பெண்களே!… இது உங்களுக்கான உற்சாக டிப்ஸ்…!!

Read Time:3 Minute, 8 Second

work_office_girl_001-w245வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பிரச்னைகள் தவிர்த்து உற்சாகமான, மகிழ்ச்சிகரமான, நிம்மதியான பணி அனுபவம் பெறுவதற்கான ஆலோசனைகள் தருகிறார், மயிலாடுதுறையைச் சேர்ந்த சர்வதேச மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் மற்றும் ‘பேஸ்’ மேலாண்மை நிறுவன இயக்குநர் வெ.இராமன்.

1. ஆண்டுத் திட்டம், மாதத் திட்டம், வாரத் திட்டம், தினசரி திட்டமிடல் (yearly plan, monthly plan, weekly plan, daily plan) என்று வகுத்துக்கொள்ளுங்கள். அப்போது பணிகளை முடிக்க வேண்டிய காலத்திற்குள் முடிக்க இயலும். மேலும், மாதத் திட்டம் ஆண்டுத் திட்டத்தை ஒட்டியும், வாரத் திட்டம் மாதத் திட்டத்தையும் ஒட்டியும், தினசரித் திட்டமிடல் வாரத் திட்டத்தை ஒட்டியும் இருக்குமாறு அமைத்துக்கொள்வது சிறப்பு.

2. வேலைக்குச் செல்லும் பெண்கள் பெர்சனல், அலுவலகம் என இரண்டு மொபைல்போன்கள் வைத்துக் கொள்ளலாம். அலுவலக நேரத்தில் பெர்சனல் மொபைலை மியூட்டில் வைத்துவிட்டு, வீடு திரும்பும் நேரத்தில் அதை உபயோகித்துக் கொள்ளலாம்

3. பணியிடத்தில் ஏதாவது இடர்பாடுகள் இருந்தால் அதை பக்குவமாக கணவரிடமோ அல்லது தந்தையிடமோ ஆரம்பத்திலேயே சொல்லி வைப்பது நல்லது.

4. உடன் பணிபுரியும் நெருங்கிய தோழிகளை வீட்டுக்கு அழைத்து ஒரு விருந்து கொடுத்து, நட்பை பலமாக்கிக் கொள்ளுங்கள். அலுவல் சிரமங்களை இணைந்து எதிர்கொள்ளும் தைரியத்தையும் திறனையும் அந்த நட்பு கொடுக்கும்.

5. வீட்டுப் பிரச்னைகள அலுவலகத்தில் பகிராதீரகள். உங்கள் குடும்பம் பற்றி எப்போதும் பாஸிட்டிவ் ஆகவே சொல்லி வையுங்கள். உங்களுக்கான மதிப்பு கிடைக்க, உங்கள் குடும்பம் தான் அடிப்படை என்பதை மறவாதீர்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலையில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை: காஜல் அகர்வால்…!!
Next post நீங்கள் தூங்கும் போது உங்கள் வாய் திறந்து இருக்குமா? அப்போ இது உங்களுக்கு தான்..!!