கிளிநொச்சியில் வயோதிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!!

Read Time:3 Minute, 22 Second

kili-1கடந்த மூன்று நாட்களாக காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை சேர்ந்த என்பது வயதான மூத்தார் இராசரத்தினம் கனகாம்பிகைக்குளம் பாடசாலைக்கு முன்பக்கமாக இருக்கும் வீட்டின் பாழடைந்த கிணற்றில் இருந்து இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

தனியாக வசித்து வந்த இவரை காணவில்லை என கிராம வாசிகளால் தேடப்பட்டு வந்த நிலையில் குறித்த பாழடைந்த கிணற்றில் சடலமாக மிதப்பதனை அவதானித்த கிராம மக்கள் கிளிநொச்சிப் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த கிளிநொச்சிப் போலீசார் ,கிளிநொச்சி குற்றத்தடகவியல் பொலிசார் மற்றும் சட்டவைத்திய அதிகாரி ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர்
பின்னர் குறித்த சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது

அத்துடன் குறித்த வயோதிபரின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர் இறந்த வயோதிபர் அவரது கையில் டொச் லைட்டை இறுக்கப் பிடித்தவாறு இறந்துள்ளார் கிணற்றில் விழுந்து இறந்த ஒருவர் எவ்வாறு குறித்த டொச் லைட்டை கைவிடாமல் இறக்க முடியும் எனக் கேள்ளவி எழுப்பி உள்ளனர் மேலும் அவர் காணாமல் போய் மூன்று நாட்களான நிலையில் அவரது சடலத்தினைப் பார்க்கும் பொழுது இறந்து ஒரு நாட்களே ஆன சடலம் போன்று உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்

குறித்த வயோதிபரிற்கு ஒரு மகளும் ஒருமகனும் இருபதாகவும் மகள் புலம்பெயர் நாட்டில் இருப்பதாகவும் மகனும் வயோதிபரது மனைவியும் வெளி மாவட்டம் ஒன்றில் இருப்பதாகவும் அவர் காணாமல் போன செய்தி குடும்பத்தாருக்கு கிராம மக்களால் வழங்கப்பட்டும் இதுவரை குடும்ப உறவுகள் யாரும் வரவில்லை இன்றும் அவர் இறந்த செய்தி மக்களினால் வழங்கப்பட்டுள்ளது இருந்தும் தமக்கு நாளை சமூகமளிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் நாளை மறுதினமே எம்மால் வரமுடியும் எனவும் அலட்சியமாக பதிலளித்தமை மேலும் சந்தேகங்களை உருவாக்குவதாக கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்

இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பாக பல கோணங்களில் கிளிநொச்சிப் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தப்பித்தவறி இதனை மட்டும் வெளியில் சொல்லிவிடாதீர்கள்…!!
Next post நைஜீரியா இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 45-ஆக உயர்வு..!!