ஆண்கள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டியவை…!!
பொதுவாக ஆண்களுக்கு 55 வயதுக்கு மேல் ஆனால் போதும் பலவிதமான பிரச்சனைகள் மூலம் கஷ்டப்படுவார்கள்.
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஆன ஆண்களுக்கு சொட்டுச் சொட்டாக சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர் கழிப்பதில் அதிகமாக சிரமப்படுதல் இது போன்ற சில பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மேலும் ஒருசில ஆண்கள் இது போன்ற பிரச்சனைகளை வெளியில் சொல்வதற்கு கூச்சப்பட்டு கொண்டு தங்களுக்குள்ளயே அந்த பிரச்சனைகளை வைத்துக் கொண்டு அதை பெரிய பிரச்சனையாக மாற்றி விடுகின்றார்கள்.
இதனால் ஆண்கள் முடி நரைத்தல், கண்ணில் புரை, ப்ராஸ்டேட் சுரப்பியின் அளவு அதிகரித்தல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
எனவே ஆண்களுக்கு இருக்கும் இந்த மாதிரியான பிரச்சனைகளை ஆரம்பக் கட்டத்திலேயே அவர்கள் சரி செய்துக் கொள்வது மிகவும் நல்லது.
ஆண்கள் ப்ராஸ்டேட் பெரிதாக என்ன காரணம்?
ஆண்களில் இனப்பெருக்க உறுப்பில் ப்ராஸ்டேட் சுரப்பியானது முக்கியமான ஒன்றாகும்.
இந்த சுரப்பி ஆண்களின் சிறுநீரகப் பைக்கு கீழ் வால்நட் வடிவத்தில் அமைந்திருக்கிறது.
அந்த விதைப் பையில் இருந்து விந்து அணுக்கள், பிரத்யேகக் குழாய் வழியாக இனப்பெருக்க சுரப்பிக்கு வருகிறது.
பின் ஆண்களின் ப்ராஸ்டேட் சுரப்பியிலிருந்து வெளிவரும் வெள்ளை நிறத் திரவம் விந்து அணுக்களுடன் இணைந்து விந்து திரவம் (Semen) உற்பத்தியாகிறது.
இந்த வெள்ளை நிறத் திரவ உற்பத்திக்கு, ப்ராஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆன்டிஜன் (Prostatespecific antigen) என்ற புரதம் தான் காரணமாக இருக்கிறது.
ஆண்களின் ப்ராஸ்டேட் பெரிதாக இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று புற்றுநோய் காரணமாக பெரிதாவது , மற்றொரு வகை பினைன் ப்ராஸ்டடிக் ஹைப்பர்ப்ளேசியா (Benign Prostatic hyperplasia) எனப்படும் பிரச்னைகள் ஆகும்.
ஆண்களின் ப்ராஸ்டேட் இருக்கும் ஃபைபர் தசைகள் அதிகமாக இயங்கும் போது ப்ராஸ்டேட் பெரிதாகிறது. இதனால் அவர்களுக்கு வலி மற்றும் சிறுநீரை முழுமையாக வெளியேற்ற முடியாமல் இருக்கும்.
ஆண்களுக்கு ஏற்படும் ப்ராஸ்டேட் புற்றுநோய்
பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவது போல ஆண்களுக்கு ப்ராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுகிறது.
மேலும் 60 வயதை அடைந்த ஆண்கள் தங்களின் ப்ராஸ்டேட்டை சோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
ப்ராஸ்டேட் புற்றுநோய் ஏற்பட்டால், அதன் ஆரம்பக் கட்டத்திலேயே பரிசோதனை மூலம் தெரிந்துக் கொண்டு ரோபோட்டிக் சர்ஜரி மற்றும் ரேடியோ தெரப்பி மூலம் அந்தப் பிரச்சனையை குணப்படுத்தி விடலாம்.
ஆண்களின் உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை காரணமாக ப்ராஸ்டேட் புற்றுநோய் பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்வது ஆண்களுக்கு மிகவும் அவசியமாகும்.
ஆண்களின் ப்ராஸ்டேட்டில் பிரச்சனை உள்ளது என்பதை உறுதி செய்வது எப்படி?
ஆண்களில் வயதானவர்கள் மாதம் ஒருமுறை சிறுநீர் சரியாக வெளியேறுகிறதா என்பதைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் நன்றாக தண்ணீர் குடித்துவிட்டு அரை மணி நேரம் கழித்து 300 மிலி கொள்ளளவு கொண்ட குடுவையில் சிறுநீர் கழிக்க வேண்டும்.
30 விநாடிகளில் சிறுநீர் முழுவதுமாக வெளியேறினால், பிரச்னை இல்லை என்று அர்த்தமாகும்.
சிறுநீர் முழுவதுமாக கழிக்க ஒரு நிமிடத்துக்கு மேல் ஆகிறது என்றால் மிகவும் எச்சரிக்கையாக சோதனை செய்துக் கொள்வது அவசியமாகும்.
இயற்கையான முறையில் ப்ராஸ்டேட் புற்றுநோயை தடுப்பது எப்படி?
ஆண்கள் 50 வயதைக் கடந்த பின் ஆண்டுக்கு ஒருமுறை பி.எஸ்.ஏ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், லைக்கோபீன் நிறைந்த தக்காளி, தர்பூசணி, மாதுளம்பழம் போன்ற உணவுகளை அடிக்கடி அதிகமாக சாப்பிடுவதன் மூலம் ப்ராஸ்டேட் பிரச்னைகளைத் தடுக்க முடியும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Average Rating