இஸ்ரேல் ஜனாதிபதி மீது செக்ஸ் குற்றச்சாட்டு

Read Time:1 Minute, 22 Second

isrel.map.jpgஇஸ்ரேல் நாட்டு ஜனாதிபதி மோஷே கட்சவ். இவர் தன்னிடம் பணிபுரிந்த ஒரு பெண்ணை செக்ஸ் உறவுக்காக கட்டாயப்படுத்தியதாக புகார் செய்யப்பட்டது. இதனால் அந்தப்பெண் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திவருகிறார்கள்.

ஜெருசலேம் நகரில் உள்ள ஜனாதிபதி வீட்டில் பலமணிநேரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் அந்தப்பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று கூறினார். இந்த விசாரணையின் முடிவில் அவர் தவறு செய்ததாக போலீசார் உறுதியாக நம்பினால் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரலாம்.

ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டியது இல்லை.அதற்கான பாதுகாப்பை அவரது பதவி, அவருக்கு வழங்கி உள்ளது. அவர் மீது பாராளுமன்றத்தில் கண்டனத்தீர்மானம் கொண்டு வரப்படலாம்.

போலீசார், அவர் வீட்டில் இருந்து கம்ப்ïட்டர் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வைகோ மீது காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார்
Next post 75 வயது முதியவர், 13 வயது சிறுமி `காதல்’ திருமணம்