ஐதராபாத்: 7 மாடி கட்டிடம் இடிந்து விபத்து – 10 பேர் பலி?

Read Time:1 Minute, 46 Second

201612090044473498_10-feared-dead-as-sevenstorey-building-collapses-in_secvpfஐதராபாத் நகரில் உல்ல நனாகுராகுடா பகுதியில் 7 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக ஐதராபாத் நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கட்டிடம் இடிந்து விழுந்த போது அதன் 6-வது மாடியில் தொழிலாலர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். இருப்பினும், விபத்தின் போது எவ்வளவு பேர் கட்டிடத்திற்கு உள்ளே இருந்தால் என்பது தெளிவாக தெரியவில்லை.

சுமார் 14 குடும்பத்தினர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக, ஐதராபாத் நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதிப்பு குறித்து உடனடி தகவல் எதுவும் தெரியவில்லை என்று கூறிய ஐதராபாத் நகராட்சி கமிஷ்னர் ஜனார்தன் ரெட்டி, திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில் சுமார் 10 தொழிலாளர்கள் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என்று தெரிவித்தார்.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநகராட்சி போலீசார் உடனடியாக் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுரையில் போலீஸ்காரர்களின் தாய் கழுத்தை அறுத்து கொலை…!!
Next post சாலமன் தீவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை…!!