மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

Read Time:4 Minute, 11 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-9மாங்காயின் சுவைக்கு ஏற்ப அதனுடைய இலை, வேர், பூ பட்டை என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் அதிகமாகவே நிறைந்துள்ளது.

மாம்பழத்தில் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை விட மாங்காயில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது.

ஆனால் அந்த மாங்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், செரிமான பிரச்சனை, தொண்டை கரகரப்பு, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.

எனவே நமது உடம்பிற்கு நன்மை அளிக்கக் கூடிய எந்தவொரு உணவாக இருந்தாலும் அதை அளவாக சாப்பிட வேண்டும்.

மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மாம்பழத்தில் கலோரிகள் மற்றும் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. ஆனால் மாங்காயில் கலோரிகள் இல்லை. எனவே இந்த மாங்காயை அதிக உடல் எடையை கொண்டவர்கள் தினமும் சாப்பிடலாம், இதனால் விரைவில் உடல் எடை குறையும்.

மாங்காய் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து சிறந்த நிவாரணம் தரக் கூடிய ஒரு உணவுப் பொருளாகும். எனவே அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், உடனே மாங்காய் சாப்பிடலாம். இதனால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

கர்ப்பிணிகளுக்கு காலையில் ஏற்படும் அதிகமான சோர்வு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கு மாங்காய் சாப்பிட்டால் நல்ல தீர்வுகள் கிடைக்கும்.

மாங்காய் உடலின் எனர்ஜியை அதிகரிக்கிறது. எனவே இந்த மாங்காயை நம்முடைய மதிய உணவிற்கு பின் சாப்பிட்டு வந்தால், மதிய வேளையில் ஏற்படும் அரைத்தூக்க நிலையில் இருந்து விடுபடலாம்.
மாங்காய் சாப்பிடுவதன் மூலம் பித்தநீர் சுரப்பு அதிகரிப்பதோடு, குடலில் ஏதேனும் பாக்டீரியல் தொற்றுக்களை சரிசெய்து, குடலை சுத்தப்படுத்துகிறது. எனவே மாங்காய் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மாங்காயில் உள்ள விட்டமின் C சத்துக்கள், நமது உடம்பின் ரத்த நாளங்களின் நீட்சித்தன்மையை அதிகரித்து, புதிய ரத்தணுக்களின் உற்பத்தியை ஏற்படுத்துகிறது. மேலும் வியர்குருவை தடுத்து, அதிக வெயிலால் ஏற்படும் பிரச்சனையையும் தடுக்கிறது.

மாங்காயை உப்பு மற்றும் தேனில் தொட்டு சாப்பிட்டு வருவதால், மலச்சிக்கல் பிரச்சனை உடனே நீங்கி விடும். அதேபோல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாங்காயை தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மாங்காய் சாப்பிடுவதன் மூலம், பற்களின் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு, வாய் துர்நாற்றம், பல் சொத்தை போன்ற பிரச்சனைகளை தடுத்து பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பிணிகளுக்கு மருத்துவர் தரும் அட்வைஸ்…!!
Next post பாகிஸ்தான் தொழிலாளியை கொலை செய்த வழக்கு: இந்தியர்கள் 10 பேருக்கு மரண தண்டனை…!!