ஜெயலலிதா கன்னத்தில் இருந்த 4 புள்ளிகள்… எம்பார்மிங் செய்தது ஏன் தெரியுமா? வீடியோ

Read Time:4 Minute, 3 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2ஜெயலலிதாவின் முகம் மரணத்திற்குப் பின்னரும் பொலிவு மாறாமல் காணப்பட்டதற்கு அவரது கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள்தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: ஜெயலலிதாவின் அழகு முகத்தில் நான்கு புள்ளிகள் காணப்பட்டது. இது அவரை நன்றாக கவனித்தவர்களுக்கு தெரியவரும்.

ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்ததாக கூறப்பட்டது.

இதேவேளை டிசம்பர் 6ம் தேதி அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உடலை பார்த்தவர்களுக்கு ஆச்சரியம் காணப்பட்டது.

காரணம் சட்டசபையில் பார்க்கும் போது காணப்படும் அதே பொலிவுடன் இருந்தது ஜெயலலிதாவின் முகம். கடந்த 75 நாட்கள் மருத்துவமனையில் நோய் பாதிப்பில் உயிரிழந்தவர் போலவே ஜெயலலிதாவின் முகம் காணப்படவில்லை.

மலர்ந்த தாமரை போல முகம் பொலிவுடன் காணப்பட்டதுதான் பலரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியது. இதற்குக் காரணம் அவரது கன்னத்தில் காணப்பட்ட 4 புள்ளிகள் தானாம். எம்பார்மிங் முறையில் அவரது உடல் பதப்படுத்தப்பட்டது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் சரவணன் சவடமுத்து தனது பதிவில் இறந்தவர்களின் முகம் பளிச்சென்று இருக்கவும், அடக்கம் செய்யும் நேரம் வரையிலும் கெடாமல் இருக்கவும் ‘எம்பால்மிங்’ எனப்படும் சின்ன டச்சிங் செய்யப்படும்.

இதை இறந்தபிறகு செய்வார்கள். இதற்கு அரை மணி நேரம் செலவிடப்படும். சடலத்திற்கு உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டால் மருத்துவமனையிலேயே இதைச் செய்து கொடுப்பார்கள்.

கன்னத்தில் நான்கு இடங்களிலோ அல்லது மூன்று இடங்களிலோ ஊசி போடுவார்கள். அந்தத் தழும்பு அப்படியேதான் இருக்கும். அது போலத்தான் இங்கேயும் செய்திருக்கிறார்கள். என்ன. இதற்கு தனியாக கட்டணம் வசூலிப்பார்கள்.

ஆக, இதுவொரு காஸ்ட்லியான மேக்கப்தான் என்று கூறியுள்ளார். இதேபோல் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் முகத்தில், அவரது வலது வாயோரம் ரத்தம் கசிந்த அடையாளம் அப்படியேதான் இருந்தது.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் முகம் வீட்டிற்கு கொண்டு வந்த மறுநாள் காலையில் திடீரென்று கருமையாகிப் போனது.. என்னவென்றே தெரியவில்லை.

அந்த வீடியோ இருந்தால் தேடிப் பாருங்கள்.. புரியும்..! இப்போது ஜெயலலிதாவுக்கு இந்த எம்பார்மிங்’ சிகிச்சை செய்ததில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

அவர் சினிமா நடிகையாகவும் இருந்ததினால் பொது இடங்களுக்கு வரும்போது கடைசிவரையிலும் தன்னை குறைந்தபட்சம் அழகாக வெளிப்படுத்திக்கொண்டார்.

இதில் ஒன்றும் தவறில்லை.. அதையே அவருக்கு, சசிகலாவும் பின்பற்றியிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது..! என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமிக்கு நேர்ந்த அநியாயம்: பாதிரியாருக்கு இரட்டை ஆயுள்..!!
Next post ஜெயலலிதாவின் இறப்பு டிசம்பர் 5 அல்ல..! அதுவும் பொய்யானது..!!