சிறுமிக்கு நேர்ந்த அநியாயம்: பாதிரியாருக்கு இரட்டை ஆயுள்..!!

Read Time:3 Minute, 9 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-8சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கேரளா மாநிலத்தை சேர்ந்த கத்தோலிக்க மத குரு ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டபுரம் மறை மாவட்டத்தின் உறுப்பினரான Fr. Figarez கத்தோலிக்க மத குருவிற்கே இந்த இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் செய்த முறைப்பாட்டை அடுத்து மத குரு கைது செய்யப்பட்டார்.

மத குரு பணியில் ஈடுபட்டிருந்த தேவாலயத்தில் பங்கு வகிகும் கத்தோலிக்க சமூகத்தை சேர்ந்த சிறுமியை கடந்த ஜனவரி மாதம் முதல் பல முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.

9 வகுப்பில் படித்து வந்த இந்த சிறுமியை குற்றவாளியான மத குரு தேவாலய வளாகத்திற்குள் வைத்து மூன்று மாதங்களாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

மத போதகர் கைது செய்யப்படுவதை தவிர்க்க டுபாய் நாட்டுக்கு தப்பிச் சென்றிருந்தார். இதனையடுத்து கேரளா உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்துடன் நீதிமன்றம் மே மாதம் 15 ஆம் திகதி வரை பிணை வழங்கியிருந்தது. மே மாதம் 2 ஆம் திகதி அவர் நாடு திரும்பியிருந்தார்.

கோட்டபுரம் கத்தோலிக்க மறை மாவட்டம் மத குருவிற்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்திருந்தது. பொலிஸார் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியதை அடுத்து, அவரை கத்தோலிக்க திருச் சபை சபையில் இருந்து தற்காலிகமாக நீக்கியது.

பெற்றோரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், கத்தோலிக்க மத குருவை கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரளா நீதிமன்றம் குற்றவளியான கத்தோலிக்க மத குரு Edwin Figarez இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு செல்வேஷன் ஆர்மி கிறிஸ்தவ மத பிரிவை சார்ந்த போதகர் சனில் கே. ஜேம்ஸ் என்பவருக்கும், மற்றுமொரு கிறிஸ்தவ சபை சேர்ந்த மத போதகருக்கும் இதே குற்றச்சாட்டில் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜோடி! காரணம்?
Next post ஜெயலலிதா கன்னத்தில் இருந்த 4 புள்ளிகள்… எம்பார்மிங் செய்தது ஏன் தெரியுமா? வீடியோ