இந்த தவறை தான் நாம் தினமும் செஞ்சுகிட்டு இருக்கோம்…!!

Read Time:3 Minute, 11 Second

face_wash_001-w245இருங்க பேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன், அப்ப தான் முகம் பிரஷ்ஷா இருக்கும். இந்த வாக்கியத்தை நிறைய பேர் நம்மிடம் சொல்லி கேட்டிருப்போம் அல்லது நாம் யாரிடமாவது சொல்லியிருப்போம்.

முகம் கழுவுவது சாதாரண விடயம் போல தோன்றினாலும், அதை தவறாக செய்தால் தோலுக்கு எவ்வளவு பாதிப்பு வரும் தெரியுமா? சரி முகம் கழுவுவதில் எந்தவிதமான தவறுகள் நிகழ்கிறது என பார்ப்போம்.

சந்தையில் முகத்துக்கு போடுவதற்கெனவே பல கீரிம்கள், லோஷன்கள் விற்கப்படுகின்றது. இதில் பல பொருட்களில் நம் முகத்தோலில் உள்ள உயிரணுக்களை பாதிக்கும் கெமிக்கல் கலந்திருக்க கூடும். அதனால் முடிந்தவரை இயற்கை பொருளை நாடுவதே சிறந்தது.

சிலர் முகத்தை ஒரு நாளைக்கு பல தடவை கழுவுவார்கள். இப்படி அடிக்கடி செய்தால் அது தோலில் ஒரு வித வரட்சியை ஏற்படுத்தி எரிச்சலை தரும். இதனால் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறைக்கு மேல் முகம் கழுவ கூடாது.

முகத்தை நல்ல சூடான தண்ணீரிலோ அல்லது அதிக குளிர்ச்சியான தண்ணீரிலோ கழுவ கூடாது. வெது வெதுப்பான தண்ணீரில் கழுவினால் அது தோலுக்கு நல்லது.

அதே போல முகத்தை கழுவும் போது சரியான அளவில் முகம் முழுவதும் மசாஜ் போல செய்து கழுவலாம். இது முகத்தில் உள்ள அழுக்கை அப்புறப்படுத்தவும், முகம் பளிச்சென தெரியவும் உதவும்.

முகத்தை கழுவி விட்டு அந்த ஈரப்பதம் காயும் முன்னர் எந்த விதமான கீரிமையும் போட கூடாது. காய்ந்த பின்னர் போட்டு பின்னர் முகத்தை கழுவலாம்.

பலருக்கு முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சனை இருக்கும். அவர்கள் இயற்கையான வெள்ளரிக்காயை தினம் காலையில் முகத்தில் தேய்த்து, பின்னர் தண்ணீரி கழுவினால் இந்த பிரச்சனை தீரும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா?… அப்போ உங்களுக்கு இந்த நோய் வராதாம்…!!
Next post ஆண்களை உறவில் ஏமாற்ற தூண்டும் மூன்று முக்கிய காரணங்கள்…!!