தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த குரல்களில் ஒன்று அணைந்து விட்டது – அங்கஜன்…!!

Read Time:1 Minute, 45 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90உலகம் எங்கும் ஈழத் தமிழர்களுக்காக அவர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்று வாழ்வதற்காக ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த குரல்களில் ஜெயலலிதா ஜெயராமின் குரல் பெறுமதி மிக்கதொன்றாகும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரித்தார்.

தமிழ் நாட்டில் நேற்றைய தினம் இயற்கை எய்திய தமிழக முதல்வரும் அனைத்திந்திய அ.தி.மு.கழகத்தின் பொதுச் செயலாளருமான முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் சார்பாக இன்று(06) இரங்கல் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

காலாகாலமாக இன அடக்கு முறைகளை ஏகாபத்தியங்கள் தமிழர் மீது திணித்த போது ஜெயலலிதா ஜெயராமின் குரல் அந்த ஏகாபத்தியங்களுக்கெதிராக ஒலிக்கத் தவறியதில்லை.

எமது ஈழத்து சொந்தங்கள் தமிழகத்தில் தஞ்சம் கோரிய போதும் அந்தச் சொந்தங்களை மரியாதையுடன் நடத்தியவர் ஜெயலலிதா ஜெயராம் ஆவார்.

இவரின் இழப்பானது இந்தியத் தமிழருக்கு மாத்திரமன்றி ஈழத் தமிழர்களுக்கும் பாரியதொரு இழப்பாகும்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதல் குழந்தை பிறந்த பிறகு, உங்கள் மனைவியிடம் இந்த 5 மாற்றங்களை கண்டுள்ளீர்களா?
Next post ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார் மோடி…!!