பிரித்தானியாவை சுனாமி தாக்கும் அபாயம்! 8200 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட போகும் அபாயம்..!!

Read Time:2 Minute, 49 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-3பிரித்தானியாவின் கடலோர பிரதேசங்கள் பலவற்றை சுனாமி தாக்குதல் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் கடலோரத்தில் உள்ள பல வலயமைப்புகளுக்கு சுனாமி நிலை ஏற்பட கூடும் என டர்ஹேம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பீட்டர் டோலின் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு அருகில் உள்ள மண்டலங்களுக்கு கீழ் பாரிய மண் மேடுகள் உள்ள நிலையில் அந்த மேடுகள் உடைந்து விழும் அவதானத்தில் உள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அப்படி ஏற்பட்டால் 65 அடியிலான பாரிய சுனாமி நிலை ஒன்றுக்கு முகம் கொடுக்கும் நிலையில் பிரித்தானிய கடலோர பகுதிகளுக்கு ஏற்படும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரித்தானியாவுக்கு அருகில் ஏற்படும் நில அதிர்வு அல்லது கடல் பகுதிகளுக்கு அருகில் உள்ள மண் பில்லியன் டொன் கணக்கில் உடைந்து விழும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8200 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியா இவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் 65 அடியிலான சுனாமி நிலைமை ஒன்று அந்த நாட்டிற்கு பாதித்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த நாட்டின் ஆவணங்களுக்கமைய 1550ஆம் ஆண்டில் பிரித்தானியாவுக்கு சுனாமி நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக பாரிய அளவிலான கப்பல்கள் அழிந்துள்ளதாக அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1755 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் கொரன்வெல் பிரதேசத்தில் 10 அடியிலான சுனாமியினால் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்த விடயங்களை கருத்திற் கொண்டு பிரித்தானியாவில் சுனாமி நிலை தொடர்பில் விசேட அவதான நிலைமை ஒன்றை அறிவிக்குமாறு அவர்கள் அந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுவானில் துடிதுடித்த இளம்பெண்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்- ஏன் தெரியுமா?
Next post கெமிக்கல் இல்லாத தக்காளியை கண்டுபிடிப்பது எப்படி?