சல்மான் கானுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பேன்: ஷாருக் கான்…!!

Read Time:1 Minute, 35 Second

201612051152245041_salman-and-i-will-definitely-work-together-in-a-film-srk_secvpfமும்பை நகரில் நடைபெற்ற சினிமா விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பாலிவுட் கதாநாயகர்கள் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகியோர் இணைந்து ‘திடீர்’ நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக மாறினார்கள். இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைந்ததாக குறிப்பிட்ட ஷாருக் கான், சல்மானுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இந்த கருத்தை வரவேற்பதாக அதே மேடையில் கூறிய சல்மான் கான், நல்ல திரைக்கதையுடன் ஒரு திறமையான இயக்குனர் தன்னை அணுகினால் ஷாருக் கானின் விருப்பத்தை நிறைவேற்ற நானும் தயார் என்றார்.

உடனடியாக, திறமையுடன் ஏராளமான பொறுமையும் அந்த இயக்குனருக்கு இருக்க வேண்டும் என்று ஷாருக் கான் கிண்டல் அடித்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக, பலமுறை ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட சல்மானும், ஷாருக்கானும் இணைந்து ‘கரண் அர்ஜூன்’ ‘ஹம் துமாரி ஹே சனம்’, ‘குச் குச் ஹோத்தா ஹே’ போன்ற படங்களில் இதற்கு முன்னர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஃபிடல் காஸ்ட்ரோ: நாயகனா, வில்லனா? கட்டுரை
Next post தம்மத்துண்டு காருக்குள் ஒரு கிராமமே பயணிப்பதை பாருங்க… நம்ப முடிகிறதா உங்களால்? வீடியோ