பார்த்திபன் தனது குருநாதர் பாக்யராஜுக்கு பாராட்டு விழா எடுத்து, தனது அடுத்த படத்துக்கு புக் செய்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்…!!

Read Time:2 Minute, 30 Second

201612051314204570_parthiban-tribute-to-bakkiyaraj-next-movie-produce_secvpfபார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பார்த்திபனின் குருநாதரும், பிரபல இயக்குனருமான பாக்யராஜுக்கு ‘குரு வணக்கம்’ என்ற பெயரில் பாராட்டு விழாவும் நடைபெற்றது.

இந்த விழாவில் பாக்யராஜுக்கு நினைவு பரிசாக மிகப்பெரிய ‘மரப்பேனா’ ஒன்றை பாண்டியராஜன் உள்பட பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்கள் அனைவரும் இணைந்து வழங்கி கவுரவித்தனர். மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பாரதிராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், சிவகுமார், வசந்த், சரண், ரமேஷ் கண்ணா, ஆர்.கே.சுரேஷ், கே.எஸ்.ரவிக்குமார், மன்சூர் அலிகான், சேரன், சுகன்யா, சுசீந்திரன், தரணி, லிங்குசாமி, நளன் குமாரசாமி, கரு.பழனியப்பன், எஸ்.வி.சேகர், சசி, சுஹாசினி, நெப்போலியன், பி.வாசு, லட்சுமி ராமகிருஷ்ணன், பிரபு, ரேகா, பவர் ஸ்டார், கங்கை அமரன், மனோபாலா, பாண்டியராஜன், ஏ.வி.எம்.சரவணன், லிசி, டிரம்ஸ் சிவமணி, ரோகிணி, மோகன் ராஜா, எடிட்டர் மோகன், நாசர், விஷால், கார்த்தி, ஷங்கர், கார்த்திக் சுப்பராஜ், கலைப்புலி எஸ்.தாணு, சுந்தர்.சி., என திரையுலக பட்டாளமே திரண்டு வந்து பாக்யராஜை பாராட்டியது.

இந்த விழா மேடையிலேயே பார்த்திபன் தனது குருநாதருக்கு மரியாதை செலுத்தும்விதமாக பாக்யராஜின் அடுத்த படத்தை தானே தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பு விடுத்தார். அந்த படத்துக்கான அட்வான்ஸ் தொகையையும் பாக்யராஜிடம் பார்த்திபன் அளித்தார். பாக்யராஜ் இயக்கவிருக்கும் அந்த படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடிப்பதாகவும் அந்த மேடையிலேயே அறிவிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்” என்னும் தகவல் தவறானது..அப்பலோ அறிக்கை..!!
Next post ஃபிடல் காஸ்ட்ரோ: நாயகனா, வில்லனா? கட்டுரை