ஜெயலலிதாவிற்கு பொருத்தப்பட்டுள்ள ECMO.. எதற்காக இது?

Read Time:2 Minute, 7 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரத்த நாளங்களை தூண்டி இதயத்தை செயல்பட வைக்கும் செயற்கை உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால், முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அமைச்சர்கள், ஆளுநர் என யாரையும் முதல்வரை பார்க்க அனுமதிக்காத நிலையில், அவ்வபோது முதல்வர் உடல்நிலை சரியாகிவிட்டது, அவர் திட உணவுகளை சாப்பிடுகிறார் என்ற அறிக்கை மட்டுமே வெளியானது

இந்நிலையில் நேற்று மாலை வேளையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படவே மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு, Extracorporeal Membrane Oxygenation (ECMO) என்ற உபகரணம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது, இது இதயத்தை செயற்கையாக செயல்பட வைக்கும்.

மேலும் இந்த உபகரணமானது, ரத்த நாளங்களில் தூண்டுதலை ஏற்படுத்தி அதை உந்தி தள்ளுவதோடு ஆக்சிஜனை சேர்த்து, கார்பன் டயாக்சைடை வெளியேற்றி இதயம், நுரையீரலுக்கு உரிய ரத்தம் செல்வதை இக்கருவி உறுதி செய்யும்.

சிபிஆர் எனப்படும் உயர்வகை இதய சிகிச்சை பலனளிக்காத பொழுது மட்டுமே ECMO கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அடுத்த 12 மணிநேரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருப்பை பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள்….!!
Next post ஜெயலலிதாவை காப்பாற்ற முடிந்த அளவு முயற்சி செய்கிறார்கள்! அப்பல்லோவில் இருந்து சங்கீதா ரெட்டி..!!