அமெரிக்காவில் இசை விருந்தில் தீ விபத்து:பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு…!!

Read Time:3 Minute, 37 Second

201612050614161714_california-warehouse-fire-nine-dead-but-death-toll-can_secvpfஅமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், ஆக்லாந்தில் உள்ள 2 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடத்தின் 2–வது மாடியில் நேற்று முன்தினம் கோல்டன் டோனா மற்றும் குழுவினரின் இசை மற்றும் நடன விருந்து நடந்தது.

இந்த நிகழ்ச்சியை சுமார் 100 பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில், அங்கு உள்ளூர் நேரப்படி இரவு 11.30 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் பரவியது. உடனே அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் ஓடினர். அலறினர். வெளியே வர முடியாதபடிக்கு தீ சுடர் விட்டு எரிந்ததுடன், பெரும் புகை மண்டலமும் எழுந்தது. தகவல் அறிந்ததும், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த கோர தீ விபத்தில் 9 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்திருப்பதாக இப்போது தெரிய வந்துள்ளது. 9 பேரின் உடல்கள் கரிக்கட்டைகளாக மீட்கப்பட்டுள்ளன. 25 பேர் காணாமல் போய் விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவர்களில் பலர் வெளிநாட்டுக்காரர்கள் என்றும் கூறப்படுகிறது.

இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் தங்களுக்கு அன்பானவர்கள் குறித்த தகவல்களை அறிய சமூக ஊடகங்களை நாடினர்.

இந்த தீ விபத்து, ஆக்லாந்தில் நடந்த தீ விபத்துகளில் மிக மோசமான ஒன்றாக கருதப்படுகிறது.

தீ விபத்து குறித்து தீயணைப்பு படை தலைமை அதிகாரி தெரசா தெலோச் ரீட் கூறுகையில், ‘‘தீ மிக வேகமாக பரவியுள்ளது. முதலில் தீ எங்கு பிடித்தது என்பது குறித்து தெரிய வரவில்லை. சரக்கு கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்த அந்த கட்டிடத்தில் சரியான நுழைவாயிலும், வெளியேறும் வழியும் இல்லை’’ என குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘ எத்தனை பேர் இந்த விபத்தில் இறந்துள்ளனர் என்பது தெரியாது. இன்னும் முழுமையாக தேடிப்பார்க்க வேண்டி உள்ளது’’ என்றார்.

இந்த விபத்து குறித்து ஆக்லாந்து மேயர் லிப்பி ஸ்சாப் கருத்து தெரிவிக்கையில், ‘‘இது மிகவும் துயரமான ஒரு சம்பவம். இது குறித்த முழுமையான தகவல்களை கூடிய விரைவில் பெற்று, பகிர்ந்து கொள்வேன்’’ என கூறினார்.

உள்ளூர் திட்ட அதிகாரி டாரின் ரானேலேட்டி, ‘‘ தீ விபத்து நடந்த கட்டிடத்தை சரக்கு கிடங்காக பயன்படுத்தத்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது’’ என கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோய் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!
Next post சரத்குமார், ராதாரவியை நீக்கியது பழிவாங்கும் நடவடிக்கை: நடிகர் சங்கம் மீது ஜே.கே.ரித்தீஷ் பாய்ச்சல்…!!