முதல்வருக்கு இதய ரத்தநாள அடைப்பை சரிசெய்ய ஆஞ்ஜியோ சிகிச்சை…!!

Read Time:1 Minute, 27 Second

201612050544465747_anjiyo-operation-treatment-to-jayalalithaa-in-apollo_secvpfதமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்தற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற வேளையில் நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ரத்த ஓட்டத்தை சரிசெய்வற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஆஞ்ஜியோ கிராபை போன்றது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் தொடர்ந்து 24 மணி நேரம் மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளார். 24 மணி நேரத்திற்கு பின் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முழுமையான தகவல் வெளியே வரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அக்குளில் வரும் கட்டிகளைப் போக்க சூப்பரான டிப்ஸ் இதோ…!!
Next post இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோய் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!